பக்கம்:தமிழ் உரை நடை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ் உரைநடை அவ்வாறு எழுதும் போது அவ்வாரிய மொழி எழுத்துக் களேக் கையாளாது தமிழில் உள்ள எழுத்துக்களின் வழியே அம்மொழிச் சொற்களே எழுதி வந்தார்கள் என்பதும் எனவே அவ்வாரிய மொழி தமிழில் சிதைந்து வழங்கும் போது வடமொழி எனப் பெயர் பெற்றது. என்பதும், பிற திசை மொழிகளிலும் இது அதிகமாக வழங்கியமையால் மற்ற திசை மொழிகளோடு சேர்த்து எண்ணப் பெருது தனியாகவே வடமொழி எனவே வழங்கி வந்தது என்பதும் நாம் அறிவனவாகும். தொல்காப்பியர் காலத்தை விட்டு, இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டு எல்லேக்குட்பட்ட சங்க காலத்திலும் வடமொழி வழக்கில் உள்ளது எனக்காண் கிருேம். சில ஆரிய நாட்டு வழக்கங்களும், இராமாயணம் பாரதம் போன்ற கதைகளும் தமிழ் நாட்டுச் சங்க இலக்கி யங்களில் இடம் பெற்றிருப்பதைக் காண்கிருேம். சங்கப் பாடல்களே யாத்த புலவருள் சிலர் வடமொழிவாணரோ என்னுமாறு அவர்தம் பெயர்கள் அமைத்திருப்பதைக் காண்கிருேம். ஆரிய அரசன் பிருகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தியதாகக் கபிலர் பாடிய பாடல் ஒன்று (குறிஞ் சிப்பாட்டு) பத்துப் பாட்டில் இடம் பெற்றிருக்கிறது. அத்துடன் அகப்பாடலால் தமிழர்க்கும் வடக்கே கங் கைக் கரையில் ஆண்ட மெளரியர்களுக்கும் நந்தர்களுக்கும் தொடர்பு இருந்ததாக அறிகிருேம். எனவே கடைச் சங்க காலத்துக்கு முன்பே-இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - தென்னட்டுக்கும் வடநாட்டுக் கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என அறிகிருேம். எனவே, இந்த இரு மொழிகளும் தம்முள் கலக்க வழி இருந்தது. சங்ககால இலக்கியங்களுள் ஒரு சில வட சொற்கள் உள்ளன. என்ருலும் அவையெல்லாம் தொல் காப்பியர் வகுத்த இலக்கண முறைப்படியே வழங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/159&oldid=874428" இலிருந்து மீள்விக்கப்பட்டது