பக்கம்:தமிழ் உரை நடை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தமிழ் உரைநடை கள் காட்டியது போன்று அத்தனைச் சொற்களையும் வட மொழிச் சார்பு படுத்தத் தேவையில்லை. சிலர், பிள்ளை அவர்கள் பல நல்ல தமிழ்ச்சொற்களையெல்லாம் வட மொழிப்படுத்தி அதல்ை பெருமை தேடிக்கொண்டார் என்பர். இது தமிழ் நாட்டு இயற்கை போலும் தமிழ் நாட்டிலே பிறந்து தமிழால் வாழ்ந்த அறிஞர்களில் சிலர் தமிழ்மொழியைப் பிறருக்கு விற்று, எல்லாவற்றையும் பிற மொழிச் சொற்களாக்கிக்கொண்டிருக்கும் நல்ல பணி ஆற் றும் காலத்தில், எங்கிருந்தோ வந்த கால்டுவெல் போன்ற பெரியவர்கள்தாம் தமிழ்ச்சொற்களே அவை என்று அறுதி யிட வேண்டியுள்ளது. எனவே, பிள்ளை அவர்கள் காட்டும் அத்தனையும் வடமொழிச் சொற்களாகா. ஏர். நீர், கோட்டம், குடி முதலாய சொற்களையும் அவர் வட மொழியாக்குகின்ருர் என்ருல் அவர் கருத்து என்னையோ! எனினும், தமிழ்மொழிக்கு இத்தனை மாறுபாடுகளையும் வென்று உண்மை நிலை காட்டி ஒளிரும் வாய்ப்பு உண்டு என்பது வந்த பிற நாட்டார்தம் பணிகளாலேதான் விளங்கு கிறது. - தமிழில் உரை நடை தோன்றிய சிலப்பதிகார காலத் தில் வடசொல் ஆட்சி தமிழில் அதிகமாகக் கலக்கத் தொடங்கிற்று. ஏறக்குறைய அதே காலத்திலேதான் தென்னிந்தியத் திராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிற கன்னடம், தெலுங்கு முதலியவற்றிலும் பிறவற்றி லும் வடமொழி கலக்கத் தொடங்கியது என்னலாம். ஆனல், அவை அம்மொழியினே ஏற்று, அதனெடு கலந்து செறிந்து வளர்ந்து, தம் நிலை மாறி, வடமொழிச் சிதைவு 1. தமிழ்ச்சுடர் மணிகள் பக். 71. 2. Comparative Grammar of Dravidian Languages by Caldwell

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/161&oldid=874431" இலிருந்து மீள்விக்கப்பட்டது