பக்கம்:தமிழ் உரை நடை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்கால உரையாசிரியர்கள் 17? சொற்களுக்கும் பிறர் காணும் விளககங்களும் உரைகளும் பொருந்தாதனவென இவர்கள் கூறும் கூற்றுக்களும் சிறக் தனவாம், •. இலக்கணத்தில் வைப்பு முறைகளே ஆய்ந்து விளக்கம் தரும் வகையில், தமிழில் சொற்களைப் பெயர் வினை இடை. உரி என்ற வைப்பு முறைக்கு இவர் காட்டும் காரணத்தை, யும் அதன்வழி இவர் உரை நடையையும் கண்டு மேலே: செல்லலாம்: 'இச்சொற்களைப் பெயர் முதலாக வைத்தது என்னை எனின், பெயர்ச்சொல் பொருளை விளக்கு தலானும், விளைச்சொல் பொருளது புடை பெயர்ச் சியை விளக்குதலானும், இடைச்சொல் பொருளை யும் பொருளது புடை பெயர்ச்சியையும் தம்பா லன்றித் தத்தங் குறிப்பால் விளக்குதலின் பெயர்ச் சொல் வினைசொற்களும் ஆகாது அவற்றின் வேறு மாகாது இடைநிகரவனவாய் நிற்றலானும், உரிச் சொல் பொருட் பண்பாகிய இசை, குறிப்பு, பண்பு மூன்றனையும் விளக்கிப் பொருட்குரிமை பூண்டு நிற்றலானும், திசைச் சொல் கொடுந்தமிழ் மொழி யாயும் அன்னிய மொழியாயும் வருதலானும், வடசொல் அந்நிய மொழியேயாய் வருதலானும், இம்முறை வைக்கப்பட்டன என்க.' இவரே தொல்காப்பியப் பாயிரத்துக்கும் அதன் முதற் குத்திரத்திற்கும் விருத்தி உரைகள் எழுயிருக்கின்ருர். அவை புலவர்களாலே நன்கு போற்றப்படுகின்ற காரணத் தால், அவற்றுள் இரண்டோர் இடங்களைக் காணல் ஏற்: புடைத்து என எண்ணுகின்றேன். "இங்ங்ணம் வழக்கும் செய்யுளும் பயின்ருர்க்கு, அவற்றின்கண் ஒரு நிகரணவாய சொற்களும் ஒன்ருே டொன்று ஒவ்வாதுமாகிய செய்கை வேறுபாடுகளும் சொன் முடிபு பொருண் முடிவு வேறுபாடுகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/180&oldid=874452" இலிருந்து மீள்விக்கப்பட்டது