பக்கம்:தமிழ் உரை நடை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலை நாட்டார் தொண்டு 193 யும் இங்கேயும் ஒடி விளையாட, சவ்வாது கஸ்தூரி முதலான பரிமளங்களைப் பிறப்பிக்கின்ற மிருகங் களினலே ஆகாசத்திலேயும் பூமியிலேயுஞ் சுகந்தங்கள் வீச, சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் தமது துஷ்டகுணமெனப்பட்ட யாவையும் மறந்து, பயங்கர சொரூபியாயிராமல், சாந்த குணத்தைக் கொண்டிருந்து சாது மிருகங் களாய் அங்கேயுமிங்கேயுந் திரிய, பல பல புஷ்ப்ங் களுடைய மதுரமான பரிமளங்களை மதுகரங்கள் பானம் பண்ணுகிருப்போல யிருக்க, குளிர்ச்சியான தென்றல் வீச, சூரியனனது தனது உக்கிரமான உஷ்ணத்தை மனுஷனிடத்திலே தைக்கப்பண்ணுமல் சகலத்துக்கும் மிதமான பிரகாசத்தைப் பரம்பப் பண்ண, தொங்குகின்ற மேற்கட்டிகள் போலே கவிழ்ந்திருக்கிற பரமண்டலமானது இரத்தின மாணிக்கங்களைத் தோற்கடிப்பது போலே நிரை நிரையே பதிக்கப்பட்ட நட்சத்திரங்களுடைய சொல்லப் படாத அலங்காரங்களினலே விளக்கப் பட்டிருக்க, இதெல்லாம் மனுஷனைவன் பார்த்துக் கர்த்தருடைய அளவறுக்கப்படாத பெலத்தையும் பரம சாமர்த்தியத்தையும் தப்பில்லாச் சிரமத்தை யும் கொண்டிருக்கிற விமரிசையையும், கரை காணுத கருணையையுங் கண்டுபிடித்துச் சகலத்தை யும் உண்டாக்கி நடத்திக் கொண்டு வருகிற கர்த்தனை அகோராத்திரம் இடை விடாமற். கொண்டாடுகிறதுக்கும் அவர் பேரிலே குறையற்ற பக்தியை வைக்கிறதற்கும் அவருடைய சித்தத்தின் படியே குறையற்ற பிரகாசமாய் மனுஷன் நடக்க முழுமனதோடு துணிகிறதற்கும் முன் சொல்லப் பட்ட பொருள்களுடைய வேடிக்கையுள்ள தெரிசன மானது பரிபூரண காரணமாயிருந்ததென்று அங்கீ கரிக்கக் கடவோம்.' 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/202&oldid=874480" இலிருந்து மீள்விக்கப்பட்டது