பக்கம்:தமிழ் உரை நடை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தமிழ் உரை நடை திரட்டி வீராசாமி செட்டியார் என்பவர் விநோதரச மஞ்சரி' என்ற பெயருடன் ஒரு நூலே வெளியிட்டதாகத் திரு. செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் குறிக்கிருர்கள்." ஐநவிநோதினி என்ற திங்கள் இதழ் அக் காலத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த ஓர் இதழாகும். அவ்விதழ் 'சுதேச பாஷாபிவிர்த்தி சங்கத்தா ரால் பாதுகாக்கப்பட்டதென அறிகிருேம். அதில் கதை. களும் கட்டுரைகளும் மாணவரும் மற்றவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளி வந்தன என அறிகிருேம். அவைகளேயன்றி வேறு பல பத்திரிகைகளும் அக் காலத்தில் தோன்றித் தமிழ் உரைநடையை வளர்த்தன எனல் மிகப் பொருந்துவதாகும். எனவே, இது வரை இருந்தது போலன்றி, இதழ் வகையில்-செய்தியை விளக்கவும், சிறு கதை முதலியன தொகுக்கவும் பயன் படும் வகையில்-ஒரு புதுமுறையில் தமிழ் உரை நடைப் பணி இக்காலத்தில் உருப்பெறலாயிற்று என்னலாம். ஆம்! அன்று அமைக்கப்பெற்ற அந்த அடிப்படையின் மேலேதான் இன்று தமிழ் நாட்டில் காணப்பெறும் நூற்றுக்கணக்கான நாள், திங்கள், கிழமை:இதழ்களும் பல ஆயிரக்கணக்கான கதை கட்டுரை நூல்களும் எழுதப் பெறுகின்றன என்பதை யாரும் மறுக்க இயலாது. பிற துறைகள் அனைத்திலும் இந்த நாளிதழ், கதை நூல் துறைகளே தமிழில் உரைநடையை அதிகமாக வளர்த்தது. என்னலாம். தமிழில் மட்டுமன்றி, எம்மொழியின் உரை நடை வளர்ச்சிக்கும் இத்துறைகள் பெரிதும் பயன் பட்டன. படுகின்றன என்பதை உலகம் அறியும். எனவே தமிழ் உரைநடை வளர்ச்சியில் இந்த இருபதாம் ஆாற்ருண்டின் _1. தமிழ் வியாசங்கள்,பக். 114. 2. டிெ பக். 116.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/217&oldid=874512" இலிருந்து மீள்விக்கப்பட்டது