பக்கம்:தமிழ் உரை நடை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்ருண்டின் விடியலிலே 209 விடியற் கால நிகழ்ச்சி ஒரு சிறந்த திருப்பு மையமாய் அமைந்துள்ளது என்பது தேற்றம். இக்காலத்தில் தமிழ் உரை நடையையும் மொழியை யும் வளர்க்கப் பயன்படும் வகையில் சிற்சில அகராதி களும் வெளி வந்தன. வீரமாமுனிவர் இயற்றிய சதுரக ராதியை முன்னர்க் கண்டோம். உவின்ஸ்லோ பாதிரியார் எழுதிய பேரகராதிக்கு ஒத்ததாகச் சிற்றகராதி ஒன்றைப் போப்பு அவர்கள் 1859ல் வெளியிட்டதாகவும், 1870ல் அவற்றின் அடிப்படையில் மற்ருேர் அகராதி உருவாக, 1888ல் மல்லாகம் விஸ்வநாதப் பிள்ளை அவர்கள் அதன் நல்ல பதிப்பை வெளியிட்டார்கள் என்றும் அறிகிருேம்.' தரங்கம் பாடியிலுள்ள கிருத்துவ சபையார், 1897ல் மற் ருேர் அகராதியை வெளியிட்டனராம். பின்பு யாழ்ப் பாணப் புலவர் கதிரைவேற் பிள்ளை அவர்களும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரும் வெவ்வேறு அகராதிகளே வெளியிட் டார்கள். இவ்வாறு இந்தக் காலம் தமிழ் உரைநடைக் கும் செய்யுளுக்கும் ஆக்கம் தரும் வகையில் அகராதிகள் தோன்றிய காலமாய் அமைந்துள்ளது. 'நாவல் என்னும் நவீனம் தோன்றிய காலமும் இது என்பதைக் கண்டோம். மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் பற்றி முன் னரே கண்டோம். அந்தக் கதை மக்களால் விரும்பி ஏற் கப்பட்டதாயிற்று. அச்சுப் பொறிகள் வந்து விட்ட காரணத்தாலே இக்காலத்தில் பல படிகளை அச்சிட்டு வழங்க ஏற்பாடு செய்ய வசதி இருந்தது. எனவே, இக் கால உரைநடைநூல்கள் மக்களிடையில் மிக அதிகமாகப் பரவலாயின. எனவே, இத்துறையில் இன்னும் சிலரும் 1. இலக்கியச் சிந்தனைகள்-வையாபுரிப் பிள்ளை, பக். 167. 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/218&oldid=874515" இலிருந்து மீள்விக்கப்பட்டது