பக்கம்:தமிழ் உரை நடை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தமிழ் உரை நடை கருத்திருத்தியிருப்பர். அவர் அனைவரையும் கம்மால் இங்கு எடுத்துக்காட்ட முடியாமற் போயினும், இரண் டொருவரை நம்மால் மறக்க இயலாது. அவருள் கமலாம் பாள் சரித்திரம்' என்னும் உரைநடை நவீனம் எழுதிய திரு. இராசம் ஐயரும், பத்மாவதி சரித்திரம் எழுதிய திரு. மாதவையரும் மிக முக்கியமானவர்கள். இவ்வாறு தமிழ் நாட்டு அறிஞர் இந்த நூற்ருண்டின் விடியலிலே பல வகையில் உரைநடையை வளர்த்தார்கள் என்பது கண்கூடு. - ஒரு பக்கத்தே முன்னர்க் கண்ட கிருத்துவ சமயத்தவர் இக்காலத்திலும் உரைகடை வளர்ச்சிக்கு உதவினர்கள் என்பதும் மிகையாகாது. அவர்தம் விவிலிய நூல் பல வகையில் தமிழில் மொழி பெயர்க்கப் பெற்றது. சைவம் வளர்த்த யாழ்ப்பாணத்து கல்லூர் ஆறுமுக காவலர் அவர்களே ஒரு காலத்தில் அம்மொழி பெயர்ப்புப் பணி யில் ஈடுபட்டார் என அறிகின்ருேம். என்ருலும், முத லில் வந்த மொழி பெயர்ப்புக்கள் பெரும்பாலும், வட மொழிச் சார்பு பற்றியே அமைந்தன. அக்காலத்தில் வடமொழி நாட்டில் அதிகமாக ஆதிக்கம் செலுத்திய தில்லை என்ருலும், தமிழ்நாட்டில் வாழ்ந்த பல கிறித்துவ சமயத் தொண்டர்கள் மலையாள காட்டிலும் தமிழ் நாட் டிலும் மாறி மாறிப் பழகிய காரணத்தாலும் இந்நாட்டுப் பகுதிகளிலும் பொதுவாகச் சாதாரண வழக்கிலுள்ள வடமொழிச் சொற்கள் அவர்களை ஈர்த்தமையாலும் ஒரு வேளை அவர்கள் அந்த வகையான மொழி பெயர்ப்புக் களை விரும்பினர்களோ என நினைக்க வேண்டியுள்ளது. எப்படி ஆயினும், நாளாக ஆக, அவர்களே அத்தகைய வடசொற்கள் மிக்குக் கலந்து மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் விவிலிய நூல்கள் மக்கள் மனத்தைக் கவரவில்லை என்பதை உணர்ந்தார்கள். ஆகவே அடுத்தடுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/219&oldid=874517" இலிருந்து மீள்விக்கப்பட்டது