பக்கம்:தமிழ் உரை நடை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை நடையின் தோற்றமும் வளர்ச்சியும் 17 பேச்சு வழக்கில் உள்ள உரை நடையை எழுதாது சிறந்த முறையில் வந்த பாட்டுக்களையே பழங்காலத்தில் எழுதி வைத்தார்கள் என்னலாம். என்ருலும் உரைநடை அடியோடு அழிந்துவிடவில்லே. சில பாட்டுக்கள் உரைநடையைப் போலவே இருந்து வந்தன. நீறு பூத்த நெருப்பைப்போல உரைநடை பற்றிய உணர்ச்சி நல்ல மக்கள் மனத்தில் இருந்து கொண்டே வந்தது. எனவே அது கால வேகத்தில் மெல்லத் தலைகாட்டத் தொடங்கிற்று என்னலாம். சங்ககாலப் பாடல்களுள் பல உரை நடை யாகக் கொள்ளத்தக்க வகையிலே அமைந்து கிடப்பதைக் காணலாம். நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே: மன்னன் உயிர்த்தே மலர் தலே உலகம்; அதனல், யான் உயிர் என்பது அறிகை, வேல் மிகு தானே வேந்தர்க்குக்கடனே, என்னும் இப்பாட்டில் உள்ள ஏகாரங்களை நீக்கிவிடின், இது உரை நடைதானே? அதனல்’ என்ற தனிச்சொல் பேச்சு உரைநடை வழக்கத்தைத்தானே நமக்கு கினேவூட்டு கிறது? இதுபோன்று உரை நடை போல அமைந்து பாட்டாய் நிற்கும் பல பாடல்களைச் சங்க இலக்கியத்தில் காணலாம். அகவற் பாக்களுள் பெரும்பாலன உரை நடையாகத்தக்க வகையில்தானே அமைகின்றன? இது கிற்க, இந்தச் சங்க காலத்தை ஒட்டி மறைந்த உரைநடை மீண்டும் தலே தூக்க ஆரம்பித்தது. மக்கள் உள்ளத்திலே மறைந்து கிடந்த உரை நடை வேட்கை பின் உருப்பெற்று வளரலாயிற்று. என்ருலும், இந்த உரையின் கடை சற்று உயர்ந்ததாய் இருந்தது. பாட்டிலும் உரைகடை உயர்ந்த தாய் இருக்கவேண்டும் என அக்கால உரைநடை காட்டிய புலவர்கள் கருதியிருக்கக்கூடும். பாட்டிசைப்பவர் சிறந்த புலவர் என்றும் சாதாரணப் பேச்சுக்களையும் பாட்டாகவே பாடினர் என்றும் காணும்போது, அவர்கள் முன் மிகச் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/26&oldid=874591" இலிருந்து மீள்விக்கப்பட்டது