பக்கம்:தமிழ் உரை நடை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தமிழ் உரை நடை புலனுகின்றது. அறிஞர்கள் இச்சொல்பற்றி நன்கு ஆராய வேண்டும். இவ்வாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏறக் குறைய ஒரே பொருள் நலம் பயக்கும் இவ்வுரை நடையினப் பற்றி அறிஞர் பலர் தம் கருத்தை வெளியிட்டுள்ளனர். “Encyclopaedia Britanica GrGrip Fpig giảistavů Guggiò அகராதி இவ்வுரை நடையைப்பற்றி நல்ல விளக்கம் தந்துள் ளது. பல பேரறிஞர்களுடைய கருத்துக்களே உள்ளடக் கியே அது இதன் உண்மைப் பொருளே உலகுக்குத் தந்திருக் கிறது என்பதை அனைவரும் அறிவர். அந்நூற்ருெகுதி சிறந்த கலைக் களஞ்சியமாய் உலகமெங்கணும் போற்றப் படும் ஒன்று அன்ருே ஆம்? அது உரைநடையை (Prose) ஆய்ந்து உணர்த்துகின்றது. பாட்டுக்கு அமைந்த இலக்கண வரம்பின்றி, மக்களால் எளிமையாக ஒளி மறைவு இன்றி எழுதவும் பேசவும் பயன் படும் ஒன்றே உரைநடையாகும். செய்யுளிலிருந்து உரை நடையைப் பிரித்துக் காட்டுவது எளிதாயினும் இன்னும் திட்டமாக இரண்டையும் வரையறுக்க இயலாது. ஏனெ னில் உயர்ந்த நடையில் செய்யுள் இலக்கணத்தோடு கலவா மலே நல்ல ஓசை நயத்துடன் எழுதும் உரைநடையை 'உரைப் பாட்டு என்று சொல்வதும் உண்டு. எனவே, செய்யு ளிலிருந்து உரைநடையைப் பிரித்துக் காண்பதை விட்டு. உரைநடை என்பதை உள்ளவாறு விளக்க முயலலாம். உரைநடை என்பது, இலக்கிய மரபு கெடாத நல்ல நடை யில், ஆழ்ந்த கருத்தோடு, செய்யுள் சந்தச் சேர்க்கை இன் றியே நல்ல ஓசை நயம் உடையதாகி, ஒளிமறைவு இன்றி உள்ளதை உள்ளபடி உரை இட்டுக் காட்டும் வகையிலே கேரிய முறையில், கருத்துக்கும் காரணத்துக்கும் பொருத்த மானதாக (ஒன்றனைப் பற்றியோ ஒருவனேப் பற்றியோ) விளக்கி உரைப்பதாகும், سیستمعاصر 1. En, Britanica. Vol. 18, pp. 391 and 592.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/41&oldid=874625" இலிருந்து மீள்விக்கப்பட்டது