பக்கம்:தமிழ் உரை நடை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழ் உரை நடை. கள்-நாடகமாயினும், கதையாயினும், கட்டுரையாயினும், வெறுஞ்சொற்களால் ஆக்கப்பட்டுப் பொரு ள ற் ற முறறையிலே செல்லாதனவாக, மக்கள் வாழ்வுக்கு ஏற்ற வகையிலே நல்ல பொருள் பொதிந்தனவாக, இனிமை யும் எளிமையும் உடையனவாக, செம்மை நடையில் செல் வனவாக அமைய வேண்டும் என்ற உண்மையை அவர் மட்டுமன்றி வேறு மேலே நாட்டு அறிஞர் பலரும் வற்புறுத்தியுள்ளனர். இலக்கியம், இலக்கணம் இரண்டும் மொழிக்கு இன்றியமையாதன! இரண்டும் ஒன்றை ஒன்று பிணைத்து வளருவன. எனினும், இரண்டினும் எது முக்கியமானது என்ற கேள்வி எழின், அறிஞர் சற்று கின்று சிந்திப்பர்பள்ளியிலோ, கல்லூரியிலோ பயிலும் மாணவரைக் கேட் டால், அவர், இலக்கணந்தான் முக்கியம். எழுத்துக்கும் சொல்லுக்கும்-ஏன்?-பொருளுக்கும் அமைந்த இலக் கணப்படிதானே ஆசிரியர்கள் எங்களை எழுதச் சொல்லு கிருர்கள்? அவ்விலக்கண முறைக்குச் சற்று மாறுபட்டி ருந்தாலும் எங்களைக் கண்டித்தும் தண்டித்தும் வரு, கிருர்கள். ஆகவே, இலக்கணத்தை ஒட்டித்தான் நாங்கள் எல்லாத் துறையுலும் செல்ல வேண்டியிருக் கிறது. அதனல், இலக்கியத்தைக் காட்டிலும் இலக் கணமே முக்கியம், என்று திட்டமாகச் சொல்லுவர். அவர் சொல்லுவதிலும் உண்மை இல்லை என்று யார் சொல்லக் கூடும்? அது சரிதான். ஆனல், ஆய்ந்து பார்ப்பின், அது முடிந்த முடிபாகாது என்பது விளங்கும். ஆரம்ப நிலையில் கல்வி கற்கும் மாணவருக்கு அவர் செல்லும் வழியை உணர்த்த இலக்கணப் பாதையை வகுத்திருக் கிருர்கள் என்பதை யாரே மறுப்பர் ஆல்ை அந்த இலக்கணம் எவ்வாறு அமைந்தது? அதற்கு முன்னே பல நூற்ருண்டுகளாக-பல ஆயிரமாயிரம் ஆண்டுகளாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/51&oldid=874709" இலிருந்து மீள்விக்கப்பட்டது