பக்கம்:தமிழ் உரை நடை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை ? 6 f" யும் என நான்கென்றும், வகைப்படுத்துரைத்தார் தொல் காப்பியர். அவற்றில் பாட்டிடை வைத்த குறிப்பென்பது, ஒரு பாட்டு இடையிடை கொண்டு கிற்கும் கருத்தினன் வருவது. "தொன்மைதானே, உரையொடு புணர்ந்த பழமை மேற்றே" என்ற இடத்தில், 'தொன்மை என்பது உரை விராய்ப் பழமையவாகிய கதைப் பொருளாகச் செய்யப்படுவது. அவை பெருந்தேவனரால் பாடப்பட்ட பாரதமும் தகடுர் யாத்திரையும் போல்வன என்ருர் நச்சினர்க்கினியர். சிலப்பதிகாரமும் ஒருவாறு இதன் பாற்படும். பாவின்றெழுந்த கிளவியென்பது பாட்டின் றிச் சூத்திரத்திற்குப் பொருள் எழுதுவது போல்வன. இறையனர் அகப்பொருளுரை தொல்காப்பியவுரை திருக்கோவையாருரை திருக்குறளுரை முதலியன இதற்கு உதாரணம். கத்தியத்திற்குக் கொன்றை வேந்தன. உதாரண மாகக் காட்டினர் வீரமாமுனிவர். அது, முதுமொழிக்காஞ்சி போன்று, குறள் வெண்செந்துறையின் பாற்படும். "சைனர்கள் பூ புராணம் முதலிய சைன நூல்களை யும், வைணவர்கள் அஷ்டாதசர ஹஸ்யம், குருபரம்பராப்ர பாவம் முதலிய வைணவ நூல்களையும் வசனமாக எழுதி யுள்ளனர். இவர்களுடைய வசனம், பெரும்பான்மை வடமொழிகளும் வடமொழித் தொடர்களும் நிரம்பி, சிறு பான்மை தமிழிடைச் சொற்களும் எச்சங்களும் முற்றுக் களும் விரவி நடைபெறுவதாயிற்று. இக்கடை மணிப்ர வாளம் எனப்பெறும். வேறு வேருன இரண்டு பாஷை யின் தனி மொழிகளும் தொடர் மொழிகளும், மணியும் பவளமும் (பவளம்-ப்ரவாளம்) விரவிக் கோத்த மாலை போன்று, விரவி கடத்தலின், இங்கடை இப்பெயர் பெறுவ தாயிற்று. சைனர்களும் வைணவர்களும் தங்கள் மதச் சார்பான தமிழ் நூல்களுக்கியற்றிய வியாக்கியானங்க ளும் இக்கடையினேயே கொண்டொழுகுவனவாம். இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/70&oldid=874754" இலிருந்து மீள்விக்கப்பட்டது