பக்கம்:தமிழ் உரை நடை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{II சிலப்பதிகார உரை நடை தொல்காப்பியர் உரையைப்பற்றிய குறிப்புக்களே எழுதிவைத்த போதிலுங்கூட, அவர் காலத்தில் விளங் கிய உரைநடை எத்தகையது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் அது உணர்வின் எல்லையென உதட்டு வழிப் பெருக்கெடுத்தோடி வரும் பாட்டின் எல்லையாய் நின்று அதற்கும் மேம்பட்டதாய்பழமையானதாய் - அமைந்துள்ளமையைக் கா ண் கி ருேம். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பு தலே' தொல்காப்பியர் மரபு. ஆதலின், அவர் காலத் திலோ, அதற்கு முன்போ உரைநடை வழக்கத்தில் இல்லாதிருக்க, தாம் இல்லாத ஒன்றற்கு இலக்கணம் கூறியிருக்கமாட்டார். எனவே, மிகு பழங்காலத்திலேதொல்காப்பியர் காலத்துக்கு முன்பே-இன்றைக்கு மூவா :யிரம் ஆண்டுகளுக்கு முன்பே-தமிழில் உரைநடை இருந்தது என்பது தேற்றம். எனினும், காலவெள்ளத் தாலோ, கடும்புனலின் சீற்றத்தாலோ, அழிந்த எத்த னேயோ இலக்கியங்களுடன் உரைநடை நூல்களும் அழிக் திருக்க வேண்டும். எனவே, நாம் பின்னர் உரைநடை யைப்பற்றி அறிவதெல்லாம் சிலப்பதிகாரத் தொடக்கத்தில் இருந்துதான் எனல் பொருந்தும். சிலப்பதிகாரம் இன்றைக்கு ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த இலக்கியம் என்பதைத் தமிழ்நாட்டு அறிஞர் அனைவரும் ஏற்றுக் கொள்ளு கின்றனர். நாமும் சிலப்பதிகார காலத்தை ஆயிரத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/72&oldid=874758" இலிருந்து மீள்விக்கப்பட்டது