பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 த. கோவேந்தன்

லண்ணத்தின் உயரத்தைத் தொடுவதால் எழும் ஒலிகள் நாலொலிகளாம். நாவின் நுனி மடியும்பொழுது அதன் கீழ்ப்புறம் வல்லண்ணத்தின் உயரத்தைத் தொடுவதால் எழும் ஒலி நாமடி ஒலியாம். நா நுனியின் மேற்புறம் மட்டும் அண்ணத்தைத் தொடுவதால் எழும் பல்லொலி முதலியவற்றை நாப்புறவொலிகள் எனலாம்

பிரேகு நகர அறிஞர்கள் இந்த ஒலிகளை ஆராய்ந் துள்ளார்கள். ஒலிக்கும்போது அண்ணத்தினை நாத் தொடும் இடங்களை விளக்க வாயச்சு எடுத்தும், அதிலிருந்து நாவின் படங்கள் வரைந்தும், எக்ரூ கதிர்ப் படங்கள் எடுத்தும், ஆராய்ந்து முடிவினை வெளி யிட்டுள்ளார்கள் இதில் த, ந என்பன தாழிடத்து ஒலியாம்

டகர உச்சரிப்பில் இரண்டு வகை உண்டு. விரைவாக ஒலிப்பது ஒருவகை கருத்தாகவும் தெளிவாகவும் ஒளிப்பது மற்றொருவகை, கருத்தாக ஒலிக்கும்போது நா நுனியானது எட்டும் இடத்தைக் கடைவாய்ப்பற்களின் கடையில் இருந்து எண்ணும்போது நான்காம் பல் மூன்றாம் பல் என்றவற்றினைக் குறிகளாகக் கொண்டு, அவற்றெதிருள்ள அண்ணம் என விளக்கலாம் விரைவாக ஒலிக்கும்போது சிறிது தாழக் கடைவாய் ஐந்தாம் பல்லின் எதிர் இடத்தை நாநூனி தொடும். உயிரெழுத்துக்களின் இடையே இந்த மெய் வந்து ஒலிக்கும்போது பல் அண்ணத்தின் பின்புறத்தில் அவ்வளவு தொலைவு நாதுணி செல்வதில்லை. இத்தகைய இடங்களில் எழும் நெகிழ்ச்சி மற்றொரு வகையாகவும் புலனாகிறது தொடும் இடத்தின் அகலம் மொழி முதல் டகரத்தில் தோன்றுவதிலும், உயிரிடை டகரத்தில் குறைந்தே தோன்றுகிறது. இந்த நெகிழ்ச்சி ஒலிப்பிலா டகரம் அங்கே ஒலிப்புடை டகரமாக மாறுவதாலும் புலனாகிறது