பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 த. கோவேந்தன்

மொழியியல்

ஒலிகளை அறிகுறிகளாக அமைத்துக்கொண்டு கருத்துகளை உணர்த்துவது மொழியாகும் கருத்து களும் உலகத்திற்குப் பொதுவானவை; ஒலிகளும் பொது வானவை ஒலிகளுக்கும் கருத்துகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் அறிகுறிகள் கணக்கற்றவை அந்த அறிகுறிகள் மொழிக்கு மொழி வேறு வேறாக உள்ளன அதனால் உலகில் பலவகை மொழிகள் இருக்கின்றன

தெளிவற்ற, குழப்பமான நிலையில் கதம்பமாக உள்ள கருத்துகளுக்கும் ஒலிகளுக்கும் தெளிவும் ஒழுங்கும் தருவது மொழியாகும் மொழி இல்லை யானால், கருத்துகளின் வளர்ச்சி அரிதாகும்; தெளிவும் ஒழுங்கும் இல்லையாகும்

மொழி, பேச்சு மொழி, எழுத்து மொழி என இரு வகைப்படும் பேச்சு மொழியில் உள்ள ஒலிகளாகிய அறிகுறிகளுக்கு எழுத்து வடிவில் அடையாளங்கள் அமைத்து, எழுத்துகள் எனவும், சொற்கள் எனவும், சொற்றொடர்கள் எனவும் நாகரிக மக்கள், போற்றி வருகின்றனர்

மொழியை ஆராய்வோர், மொழிக்குப் புறமான மக்களின் வரலாறு, நாகரிகம் முதலியவற்றை ஆராய்த லும் உண்டு; மொழியின் அகத்துறுப்புகளான ஒலியியல், சொல்லமைப்பு, சொற்றொடரமைப்பு, சொற் பொருளியல் ஆகியவற்றை ஆராய்தலும் உண்டு