பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 199

எல்லா மெல்லெழுத்துகளையும் போலத் தனிக்குற்றசையின் பின் ஈற்றொலியாக வரும் லகரம் உயிர் பின் வரும்போது இரட்டிக்கும்; கல்-அதர்-கல்லதர் இந்த விதி சில் முதலியவற்றிற்குப் பொருந்தாமையால் காலத்தால் பின்னெழுந்த விதியேயாம். எனினும் தொல் காப்பியத்தற்கும் முன்னரே நிலைத்துவிட்ட விதி யெனலாம் சில்ல, பல்ல என்பனபோன்ற வடிவங்களும் அக் காலத்தேயே தோன்றிவிட்டன. தனிக் குற்றசையின் பின்னன்றி வேறு இடங்களில்வரும் ஈற்று லகரம் பின்வரும் நகரத்தினை னகரமாக ஆக்கியபின் கெடும்; நால்-நூறு-நானூறு

வகரம் தமிழ் நெடுங்கணக்கில் மெய்யெழுத்துகளின் வரிசையில் 14 ஆவது எழுத்து வல்லெழுத்தல்லாத வற்றை மெல்லெழுத்தென்றும், ஒரெழுத்தென்றும் பிரித்த பின்னர், எஞ்சியுள்ளவற்றை உர செழுத்து என்றோர் இனமாக்கிக் கூறுவர். லகர, ளகரம் நீங்கியவை தமிழில் இந்த இனத்தைச் சேர்ந்தவை எனலாம். உரு லென ஒலிக்கும் ஒலிகள் தமிழிலில்லை. தொல் காப்பியத்தின்படியும், பின்வந்த இலக்கணங்களின் படியும், இன்று ஒலிக்கின்ற முஜைப்படியும் மேற்பல்லும் கீழிதழும் சேரும்போது ஒலிப்போடு மூச்சு வெளி வருகையில் கேட்கின்ற ஒலியாக வகரம் அமைந்துள்ளது தமிழில் வகரம் உரசல் குறைந்து ஒழுகொலியாகக் கேட்கிறது தொல்காப்பியர் இதழென்று பொதுவாகக் குறிக்கின்றமையால் மேலிதழும் கீழ்ப்பல்லும் சேர்ந்த போதும் இவ்வொலி வருமென்பர் சிலர்; அது வலிந்து ஒலிப்பதாகவே முடியும். தொடப்பெறுமிடங்கள்,