பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 த. கோவேந்தன்

மொழிக்குத் தேவையற்ற சில ஒலிகள் மற்றொரு மொழிக்குத் தேவைப்படுதலும், ஒரு மொழிக்குச் சிறப் பொலிகளாக உள்ளவை மற்றொரு, மொழிக்குச் சிறப்பற்ற ஒலிகளாய் ஒதுங்கி நிற்றலும் உண்டு ஏ, ஓ, ழ, ற ஆகியவை தமிழுக்கு இன்றியமையாதவை; வட மொழிக்கு அவை தேவையில்லை. வடமொழியின் மெல்லொலிகளாகிய க, த, ட, ப ஆகியவை தமிழில் உள்ளன எனினும் அவற்றிற்குத் தனித்தனி எழுத்து வடிவங்கள் இல்லை ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய சில மொழிகளில் உள்ள ஒருவகைப் பகரம் (f) வேறு பல மொழிகளில் இல்லை

அக் கடல் என்பதில், கடல் என்பதன் முதல் ஒலி வன்மையாகவும், ஆழ்கடல் என்பதில் மென்மையாகவும் இருத்தல் காணலாம் ஆயினும், க என்பது ஒர் எழுத்தாகவே உள்ளது. ஒலி வகையில் ஆராய்ந்தால் இருவகை ஒலிகள் உள்ளன. ஆயினும் க என்னும் ஓர் எழுத்தே போதும் எனக்கொண்டனர் தமிழில் க என்னும் ஒர் ஒலியே சிறந்து நிற்றலும், அதுவே சில இடங்களில் மெல்லொலியாக ஒலித்துச் சிறப்பின்றி நிற்றலும் காரணம் ஆகும். இவ்வாறு அந்தந்த மொழி வழக்கு நோக்கிக் கொள்ளப்படும் அடிப்படை ஒலி, முதலொலி (Phoneme) எனவும், அதைச சார்ந்து பிறக்கும் மற்ற ஒலி, சார்பொலி (Allophone) எனவும் கூறப்படும்

ஒரு மொழியில் முதலொலிகளாக உள்ளவை எல்லாம், மற்றொரு மொழியிலும் முதலொலிகளாக இருக்கத் தேவையில்லை ஒரு மொழியில் முதலொலி யாக இருப்பது மற்றொரு மொழியில் சார்பொலியாக இருத்தல் உண்டு. ஒரு மொழியின் சார்பொலி மற்றொரு மொழியில் முதலொலியாக இருத்தலும் உண்டு. ல, ள இரண்டும் தமிழில் முதல் ஒலிகள். ஆங்கிலத்தில்ல (1) மட்டுமே முதலொலி தமிழில் p மட்டுமே முதலொலி; b சார்பொலி, ஒரு மொழியின் கிளை மொழிகளுக்குள்ளும் (Dialects) இத்தகைய வேறு பாடுகள் இருப்பது உண்டு