பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 த. கோவேந்தன்

உகரம், பின் அண்ணத்திற்கும் நாவிற்கும் இடையே இடைவெளி குறைந்து வர, நா நெகிழ்ந்து நிற்க, இதழ் குவிதலால் எழும் உயிராகும்; குவி, நெகிழ், அண்மு, பின்னுயிர் எழுத்தாகும் இது குறில் என்பது அனைத்து நாட்டு ஒலியியலார் இதற்குத் தரும் குறியாம் அ, இ, உ என்பன அடிப்படை உயிர்களாம் இவற்றின் கலப்பால் பிற உயிர்கள் தோன்றும் என்பர் இகரம் ஒலிக்கும்போது, முன்னண்ணத்திற்காக எழும் நாவினால் ஒரு வளைவு தோன்ற நிற்கும் உகரம் ஒலிக்கும்போது பின்னண்ணத்திற்காக வளைவு தோன்றும்; அகரம் ஒலிக்கும்போது குரல் வளைக்காக ஒரு வளைவு தோன்றும். இந்த வளைவுகளின் முகடுகள் முக்கோணமாக அமைதலின், உயிர் முக்கோணம் (Vowel triangle) GTGörl ifr

இகரம் சுரம் மிக்கது; உகரம் சுரம் குறைந்தது. மெல் லண்ணம் மெத்தென்றிருப்பது இவ்வாறு உகரத்தின் சுரத்தைக் குறிக்கின்றது.

பொதுவாக முன் நா இயங்கும்போது இதழ் விரிந்தும், பின் நா இயங்குத்போது இதழ் குவிந்தும் இவ்வாறு நாவும் இதழும் ஒத்தியங்கக் காண்கிறோம் ஆனால், இந்த நிலை சிலபோது மாறுகிறது பின் அண்ணத்தினை நோக்கும்போது இதழ் குவியாது நிற்பதும் உண்டு. அப்போது தோன்றும் உகரம் பாக்கு முதலிய சொற்களிற் போல இதழ் குவியாமலே ஒலிக்கும் அதனைத் தமிழர் குற்றியலுகரம் என்பர். இக் குற்றிய லுகரம் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் உகரத்தினும் குறைந்து அரை மாத்திரை அளவு ஒலிக்கும் என்பர். பொதுவாக, கு,சு,டு,து,பு,று என்று முடியும் சொற்களில், இவற்றிற்கு முன் தனி நெடிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட பிற எழுத்துக்களோ எழுதப் பட்டிருந்தால் கடையில் வரும் உகரம் தமிழில் குற்றியலுகரமாக ஒலிக்கும். ஆனால் இப்போது இவ்வாறில்லாத உகரமும்