பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 த. கோவேந்தன்

என்ற இப்பொருள்களில் சுட்டெழுத்தாக வரும் போது உதுக்காண் என்பதுபோல அகச்சுட்டாகவும், உப்பக்கம் என்பதுபோலப் புறச்சுட்டாகவும் உகரம் வரும்

பிறவு, இறவு, இரவு, வரவு எனத் தொழிற்பெயர் விகுதியாகவும் மழவு எனப் பண்புப் பெயர் விகுதி யாகவும் உகரத்தினைக் கொள்வர் செய்து என்ற வாய் பாட்டு வினையெச்ச விகுதியாகவும் உகரம் வரும். பாரும் உகரம் பரந்திட்ட நாயகி (திருமந்திரம் 1751) என்ற இடத்தில் உகரம் அருட் சக்தியைக் குறிக்கின்றது.

இரண்டு என்ற எண்ணினைக் குறிக்கும் குறியாகவும் உகரம் வழங்குகிறது. இரண்டு கோடுகள் மொகஞ்ச தாரோ எழுத்துகளில் இரண்டினைக் குறிக்க வருகின்றன என்று எண்ண இடம் உண்டு.

இரண்டு என்னும் எண்ணின் குறி கீழ்க்கண்டவாறு வளர்ந்து வந்துள்ளது:

குகை எழுத்து 士 சிவரூ கந்தவர்மன் செப்பேடு シ / கீழைச் செப்பேடு Zசோழர் 2

வடிவம் : கீழே இதன் வளர்ச்சியைக் காண்க

அசோகன் கி மு. 2, 3ஆம் நூற்றாண்டின் தமிழ்க் குகை எழுதது. L L

7ஆம் நூற்றாண்டு 8ஆம் நூற்றாண்டு 10ஆம் நூற்றாண்டு 11ஆம் நூற்றாண்டு பாண்டியர் 13ஆம் நூற்றாண்டு விஜயநகரம் 15ஆம் நூற்றாண்டு தற்காலம்