பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 த. கோவேந்தன்

கிறார் தொல்காப்பியர் ஒள என்ற எழுத்தின்றியும் தமிழ் நடைபெறும் வட்டெழுத்தில் ஒள என்பது வழங்காமை யைக் காணலாம் இது தாரம் என்ற சுரத்தின் குறியாம்

வடிவம் : உகரத்தின் தலையில் வலப்புறத்தில் ஒரு கோடு இழுத்தபோது ஊகாரமானது கண்டோம் ஒகாரத்தின் வலப்புறத்தில் இவ்வாறு கோடு இழுக்கப் பெற்றபோது ஒள என்ற வடிவம் தோன்றிற்று அக்கோடு ஊ என்பதில் ள என மாறியதுபோல ஒளகாரத்திலும் மாறியது

இஃது இன்று வழங்குகிற தமிழ் நெடுங் கணக்கில் பதின்மூன்றாம் எழுத்து; உயிர் எழுத்துகளின் வரிசைக்கும் இடையே மெய் எழுத்துகளின் வரிசைக் கும் அமைந்துள்ளது; சில இடத்து உயிர் போலவும், வேறு சில இடத்து மெய்போலவும் அலகு நிலை பெறுவதால், உயிருமாகாது மெய்யுமாகாது, தனி நின்று தனி நிலை என்று பெயர் பெற்று இவ்வாறு இரண்டு வரிசை களுக்கும் இடையே நிற்கிறது போலும் (நன்னூல் விருத்தி சூத்திரம் 60).

ஆனால், இதனைத் தனித்ததோர் எழுத்தாக முற்காலத்தில் கருதியதில்லை; சார்பெழுத்து என்றே தொல்காப்பியர் வழங்குகிறார் சார்பு என்ற கருத்தினை ஆ ஜ ரிதம் என்ற வடசொல் விளக்கும்; ஆகையால், ஆஜ ரிதம் என்பதன் திரிபே ஆய்தம் என்று கூறுவாரும் உண்டு. 'சார்பு எழுத்து’ எனப் பொதுவான பெயர் குற்றிய லுகரம் குற்றியலிகரம் ஆய்தம் என்ற மூன்றற்கும் வழங்கு வதால், ஆய்தம் என்பதற்குச் சிறப்புப் பொருள்