பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஆரிய வேடனின் அயர்ந்தனை மறந்தனை
சீரிய மொழிநூல் செவ்விதி நுணர்த்தலின்
மூரிய பெருமைபை முற்று முணர்கதினே
பூசிய அடிமையைப் போக்குவை தமிழனே"

தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்

சொற்கடன். பொருட்கடன் எனக் கடன் இரு வகைத்து. இவற்றுள் முன்னது திருப்பித்தரும் இயல்- பில்லது. கடன்காரன், கடனாளி ஆகிய இருசாராரிடத்தும் ஒரே சமையத்து இருக்கக்கூடியது: திருப்பும் வரை கடனாளி யிடத்தேயே யிருப்பது.

பொருட்கடன் படுதல் ஒரு சாராருக்கு நன்மையும் ஒரு சாராருக்குத் தீமையும் விளைக்கும். கடன் கொண்டு ஓர் இன்றியமையாத கருமத்தைச் செய்யவேண்டியவராயும். குறித்த காலத்துத் திருப்பித்தரும் ஆற்றல் உடையவராயும். இருப்பார்க்கு அது நன்மையும், தேவையில்லார்க்கும் திருப்பித்தரும் ஆற்றலில்லார்க்கும் அது தீமையும் விளைக்கும்.

ஒரு வணிகன் தன் வணிக முதலீட்டிற்கும். ஒரு தொழிலாளி தன் தொழிற்கருவி வாங்குவதற்கும், ஒரு மனைக்கிழவன் தன் மனையறத்தை நடத்துதற்கும் கடன் வாங்கலாம். திருப்பித்தரும் நிலையில் அது கொள்ளத் தக்கதே. அரசரும் அரசியலாரும் கூட அமைதிக்காலத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றச் செல்வரிடமும் பிற நாட்டிடமும் போரிக்காலத்தில் போரை நடாத்த

7