பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்சொல் வடசொல்

மருப்பு தந்தம்
மழிப்பு க்ஷவரம்
மறை வேதம்
மன்றாட்டு ஜெபம்
முகமன் மேகம்
முகில் மேகம்
முதுசொம் பிதுரார்ஜிதம்
முற்றூட்டு சர்வமானியம்
முறை நீதி
மேலாடை அங்கவஸ்திரம்
மொழி பாஷை
வஞ்சினம் சபதம்
வனப்பு காவியம்
வியப்பு ஆச்சரியம்
விலங்கு மிருகம்
வெள்ளுவா பூரணை,பௌர்ணமி

இங்ஙனம் பொதுச் சொற்கள் மட்டுமின்றி. ஊர்ப் பெயர் தெய்வப் பெயர் முதலிய சிறப்புப் பெயர்களும் பெரும்பாலும் வழக்கிழந்து, அவற்றிடத்து அவற்றின் மொழிபெயர்ப்பான வடசொற்கள் வழங்கி வருகின்றன.

ஊர்ப்பெயர்

எடுத்துக்காட்டு :-
தென்சொல் வடசொல்

குடமூக்கு (குடந்தை) கும்பகோணம்
பழமலை விருத்தாசலம்
மறைக்காடு வேதாரணியம்
வெண்காடு சுவேதாரணியம்


13