பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வப் பெயர்

தென்சொல் வடசொல்

அடியார்க்கருளி பக்தவத்ஸலம்
கயற்கண்ணியழகன் மீனாக்ஷிசுந்தரன்
கேடிவி அக்ஷயன், அச்சுதன்
சொக்கன் சுந்தரன்
திருமகள் லக்ஷ்மி
பெருவுடையார் பிருகதீஸ்வரர்
மலைமகள் பார்வதி

பல வடசொற்கள் தென்சொற்களோடு பக்கம் பக்கமாய் வேண்டாது வழங்கி வருகின்றன.

எடுத்துக்காட்டு:-
தென்சொல் வடசொல்
அடிப்படை அஸ்திவாரம்
அடியான் தாசன்
ஆண்டு வருஷம்
இன்றியமையாமை அத்தியாவசியம்
உவச்சன் அர்ச்சகன்
உழவு விவசாயம்
உறுப்பு அங்கம், அவயம்
ஏனம் பாத்திரம்
கட்டளை ஆணை
கண்கூடு பிரத்தியட்சம்
கணியன் ஜோதிடன், ஜோஸியன்
கழகம் சங்கம்
குடிகள் பிரஜைகள்

14