பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில வடமொழியாளர், எளிமையும் பொருத்தமும் உள்ள அழகிய தென்சொற்களிருப்பவும் அவற்றை வெறுத்து விலக்கி, அறியவும் பொதுமக்கட்கு விளங்காதனவுமான வடசொற்களை ஆள்வார்.

தென்சொல் வடசொல்

அடிமுதல்முடிவரை பாதாதிகேசபரியந்தம்
அரிது துர்லபம்
அறம்பொருளின்பம்வீடு தர்மார்த்தாகாமமோக்ஷ்ம்
ஆண் பெண் ஸ்திரி புருஷர்
உற்றர் உறவினர் இஷ்டஜனபந்துமித்திரர்
ஐம்புலன் பஞ்சேந்திரியம்
கல் நடுதல் பாஷாணஸ்தாபனம்
குடநீராட்டு கும்பாபிஷேகம்
கும்ப நீராட்டு
குடிமதிப்பு ஜனசங்கியை
குலங்குடும்பம் ஜாதிஜனம்
கூடுவிட்டுக் கூடுபாய்தல் பரகாயப்பிரவேசம்
கைதட்டல் கரகோஷம்
கொட்டாட்டுப்பாட்டு கீதவாத்தியாநிருத்தம்
சிலம்புகழிநோன்பு கங்கணவிஸர்ஜனம்
சுவையொளியூறோசை நாற்றம் சப்தபரிசகந்தரரூபரசம்
செழிப்பு சுபீட்சம்
தடைவிடை ஆக்ஷேபசமாதானம்
தலைமுழுக்கு அப்பியங்கன ஸ்நானம்
திருக்கழுக்குன்றம் பக்ஷிதீர்த்தம்
திருமணம் விவாகம், பரிணயம்



16