பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விவசாயம், கிருஷி
சங்கம், பரிஷத், சமாஜம், சதஸ்
ஜலம், தீர்த்தம்

தமிழ் அதன் பெருமையை இழந்ததினால் அதன் ஒரு பொருட் சொற்கள் பல நாளடைவில் ஒவ்வொன்றாய் வழக்கு வீழ்த்தப்பட்டன.<br
எ-டு : - உச்சிவேளை. நண்பகல், உருமம்
ஊடல், புலவி, துனி
எச்சம். கான்முளை. கால்வழி, கொடிவழி, மரபு
பூப்படைதல்,முதுக்குறைதல்
மகிழ்ச்சி, களிப்பு, உவகை
முகில், எழிலி, மஞ்சு, குயின், களம், கார், மால்
மெய்ப்பித்தல், முதலித்தல்

பூப்படைதல் என்பது இன்று புஷ்பவதியாதல் என்று வடசொன் மொழிபெயர்ப்பாக விளங்குகின்றது.

வடசொல் வழக்கினால் தன் பொருளிழுந்த தென் சொற்களும் உள.

எ-டு:- உயிர்மெய் - பிராணி.

உயிரையுடைய மெய் உயிர்மெய். உயிர்மெய் போன்ற எழுத்தும் உயிர்மெய்யெனப் பெற்றது ஆகுபெயர். இன்று அதன் பொருள் மறைந்தமையால் உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து உயிர்மெய்யெழுத்து எனத் தவறாக உரைக்கப்படுகின்றது.

18