பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில தென் சொற்கள், பெரும்பாலாரால் நீண்ட காலமாய்ப் புறக்கணிக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்டோர். வழக்கிலேயே முடங்கித் தாழ்த்தப்பட்டுப் போயின.
எ-டு:- சோறு மிளகுசாறு, தண்ணீர்
இவற்றுக்குப் பகரமாக, சாதம், ரசம், ஜலம் அல்லது தீர்த்தம் என்னும் சொற்களை ஆள்வது உயர்வென்று கருதும் அளவிற்கு, தமிழ் தாழ்த்தப்பட்டதோடு தமிழனும் தாழ்த்தப்பட்டுப் போயினன்.

இங்ஙனம் பன்னூற்றண்டாகத் தொடர்ந்து வந்த இழிவால், தமிழர்பேச்சில் பல சொற்றொடர்கள் ஈறு தவிர முற்றும் சமற்கிருதமாகவும் மாறி விட்டன.

எ-டு :-ஈஸ்வரன் கிருபையால் கிராமத்தில் சகலரும் சௌக்கியம்.
இது. இறைவன் அருளால் சிற்றூரில் எல்லோரும் நலம் என்றிருத்தல் வேண்டும்.
வடசொல் வழக்கால் தமிழர்க்கு மொழியுணர்ச்சி முற்றும் அற்றுப் போயினமையின், புதிது புதிதாய் வந்த உருதுச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும் கங்கு கரையின்றித் தமிழிற் கலக்கத்தலைப்பட்டுவிட்டன.
எடுத்துக்காட்டு :- தமிழ்ச்சொல்உருதுச்சொல்தமிழ்ச்சொல்உருதுச்சொல்
அணியம்தயார்அருந்தல்கிராக்கி
அரங்குகச்சேரிஅறமன்றம்கச்சேரி
அறைகூவல்சவால்பறிமுதல்ஜப்தி

20