பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ச்சொல் ஆங்கிலச்சொல்
சீட்டு டிக்கெட்டு
தண்டுவார் கலைக்டர்
தாள் பேப்பர்
தூவல் பேனா
போலிகை மாதிரி (Model)
மருத்துவசாலை ஆஸ்பத்திரி
மெய்ப்பை கவுள்
வழக்கு கேசு

இங்ஙனம் மேலும் மேலும் வேற்றுச் சொற்களை வேண்டாது ஏற்றுக்கொண்டே போவதால், தமிழ் ஒரு பன்மொழிக் கலவையாக மாறித் தமிழரை ஓர் அநாகரிக இனத்தவராகக் காட்டுகின்றது.
மேலும் தமிழ்ச் சொற்பயிர் கெடுமாறு அயற்சொற்களைகள் மலிந்து விட்டதினால், பல தென்சொற்குப் பிற சொல் வாயிலாகவே பொருள் கூற வேண்டியதாயிற்று.
தென்சொல் பிறசொல்
கழுவாய் பிராயச்சித்தம் (வடசொல்)
கிள்ளாக்கு பாஸ்போர்ட்டு (Passport) (ஆங்கிலம்)
மீகாமன் மாலுமி (அரபிச்சொல்)
பெரும்பாலும் ஒரு பொருள் பற்றி ஒரு சொல்லே வழங்கற்கிடமிருத்தலால், புதுச்சொற்கள் வர வர பழஞ் சொற்கள் மறைந்து கொண்டே போகின்றன.

எ-டு :-கலவை நடை

நம் நாட்டில் நிமிஷத்திற்கு ஒரு நபர் வீதம் க்ஷய ரோகத்திற்கு பலியாகிறார்கள்.    

22