பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மார்க்கட்டுக்குப் போய்ச் சாமான்களை வாங்கிக் கொண்டு ஜல்தியாய் வா.

இந்த வருஷம் அநேகம் பேர் பரீக்ஷையில் பாஸ் பண்ணவில்லை.

கவர்னர் இங்கு விஜயம் செய்வதால் போலீஸ் பந்தோ பஸ்து செய்யப்பட்டிருக்கிறது.

சொன் மாறிக்கொண்டே போதல்



தமிழ்வடசொல்ஆங்கிலம்
உளவாடம்அச்சாரம்அட்வான்சு
ஊழியம்சேவைசர்வீசு
கேள்விவிசாரணைஈரங்கி
நோய்வியாதிசீக்கு

தமிழ் உருது ஆங்கிலம்

அறமன்றம் கச்சேரி கோர்ட்டு
கணக்கன் குமாஸ்தா கிளார்க்கு
கூடாரம் டேரா டெண்ட்டு
விடுமுறை ரஜா லீவு

இனி,நேர் தென்சொல் இல்லாத அயற்சொற்களை அங்ஙனமே ஆளுதல் கூடாதோவெனின், அதுவும் கூடாததே. தமிழ் ஒரு பெருந்தாய்மொழியாதலின், அயன்மொழிச் சொற்களின் வேர்ப்பொருளறிந்து அதற் கொப்பப் புதுச்சொற்களை ஆக்கிக் கோடற்கு வேண்டும். கருத்துச்சொற்களும் அதனிடத்து மிகுதியாய் உள. ஆதலால் அயற்சொற்கட்கு இயன்றவரை புதுச்சொற் புனைந்தே வழங்குதல் வேண்டும். இருட்டடிப்பு, கட்டுரை,