பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டுறவியக்கம், செயலாளர், தண்டல் நாயகம், தொலை வரி, தொலைபேசி, தொலைக்காட்சி, படிவம், பொது வுடைமை, முடிதிருத்து நிலையம், வழக்கறிஞர் முதலிய வேர்ப்பொருள் பற்றிய சொற்களும் சொற்பொழிவு, திரைப்படம், நகராண்மை,படம்பற்றி, பற்றாட்டு, பாராளு மன்று, மதிப்பெண் முதலிய பொருட்டன்மை பற்றிய சொற்களும் அண்மைக் காலத்தில் புதிதாகப் புனையப் பெற்றவையே.
இனி, புதுச்சொற்புனைந்தும் நேர் தென்சொல் அமைக்க வியலாத ஒரு சில அயற்சொற்களை அங்ஙனமே ஆளலாம். ஆயின், அவற்றை அயன்மொழியொலிப்படி வழங்காது தமிழொலிக்கேற்பத் திரித்தே வழங்குதல் வேண்டும். அல்லாக்கால்.வேற்றொலி விரவித் தமிழ்த் தன்மை கெட்டு விடும்.,
சிலர், கார், பஸ், ரோடு முதலிய ஆங்கிலச்சொற்கள் தமிழிற் கலந்து விட்டதனால் அவற்றை விலக்குதல் கூடாதென்பர். அவர் அறியார்,அவை இன்னும் தமிழிற் கலக்கவில்லை. "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" யாதலால், உயர்ந்த புலவர் வழக்கு நோக்கியே ஒரு மொழியின் இயல்பை அறிதல் வேண்டும். மொழி திருந்தா தார் வழங்கும் கார்,பஸ், முதலிய சொற்களைத் தமிழ்ச் சொல்லாக ஏற்றுக்கொள்ளுவது கீழ்மக்களின் ஐம்பெருங் குற்றங்களை நல்லொழுக்கமாக ஒப்புக்கொள்வது போன்றதே.
மறைமலையடிகள் போலும் புலவரல்லாத பிறர் பேசும் மொழியை அளவையாகக்கொள்ளின் ஆங்கில உலக வழக்குச் சொற்கள் அத்தனையும் தமிழ்ச் சொல்லாகி

24