பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்றும்; மொழி பெயர்க்க முடியாதவற்றிற்குப் புதுச் சொற்களைப் புனைந்துகோடல் வேண்டுமென்றும்; அதுவும் இயலாத ஒரு சில இன்றியமையாத சொற்களைத் தமிழ் எழுத்திற்கேற்பத் திரித்து வழங்குதல் வேண்டுமென்றும்; பிற மொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்ப்பதே தமிழை வளம்படுத்தத் தலைசிறந்த வழியென்றும்: பிற மொழிச் சொற்களைக் கட்டுமட்டின்றித் தமிழிற் கலப்பது அதன் கேட்டிற்கே வழிகோல்வதாகும் என்றும்; இது வரை தமிழிற் புகுத்தப்பட்ட எல்லாச் சொற்களும் தமிழதிகாரிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டனவல்ல என்றும்; அவற்றை இயன்றவரை விலக்கித் தமிழின் தூய்மையைக் காப்பது தமிழறிஞரின் தலையாய கட னென்றும்; நேர்நின்று காக்கை வெளிதென்பாரும் தாய்க் கொலை சால்புடைத்தென்பாரும் தமிழை யொழிக்கத் தயங்காராதலின் அவர் தமிழுக்கு மாறாகக் கூறும் கூற்றை யெல்லாம் கூற்றென்றே கொள்ளுதல் வேண்டுமென்றும்: தெற்றெனத் தெரிந்துகொள்க.




                                 * *
                                  *
                                 * *