பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதிப்படைச் சொற்கள்

செந்தமிழ் ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், க. மு.

மக்கள் பெயருக்குமுன் மதிப்புக் குறித்துச் சேர்க்கும் அடைச்சொற்கள் கீழ்க்கண்டவாறு :-

பெயர் அடைச்சொல்

மணமாகாத இளைஞன் பெயருக்கு முன்....
குமரன் (Master)
மணமாகாத இளைஞை பெயருக்கு முன்.....
குமரி (Miss)
இளந்தை (youth) கடந்த ஆடவன் பெயருக்கு முன்....
திருவாளன்(Mr.)
இளந்தை கடந்த பெண்டின் பெயருக்கு முன்....
திருவாட்டி(Mrs)
கண்ணியம் வாய்ந்த ஆடவன் பெயருக்கு முன்....
பெருமான்
கண்ணியம் வாய்ந்த பெண்டின் பெயருக்கு முன்....
பெருமாட்டி

னகர மெய்யும் ளகர மெய்யும் இகரவியிரும் இறுதியிற் கொண்ட ஒருமை யீறுகள் உலக வழக்கில் உயர்வு குறியாமையின், கல்வி செல்வம் பதவி அறிவு முதலியவற்றால் உயர்வு பெற்றவர் பெயரையும், அவர் பெயருக்கு முன் வரும் அடைச் சொல்லையும், உயர்வுப் பன்மை வடிவிலேயே குறித்தல் வேண்டும்


                                   32