பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருமைஉயர்வுப்பன்மைபன்மை

அழகன் அழகனார் அழகர், அழகன்மார்
தந்தை தந்தையார் தந்தையர் (தந்தைமார்)
அப்பன் அப்பனார் அப்பன்மார்
தகப்பன் தகப்பனார் தகப்பன்மார்
அம்மை அம்மையார் அம்மையர்,அம்மைமார்
தாய் தாயார் தாயர்,தாய்மார்
இளைஞன் இளைஞனார் இளைஞர்
குமரன் குமரனார் குமரர், குமரன்மார்
இளைஞை இளைஞையார் இளைஞையர்
குமரி குமரியார் குமரியர்,குமரிமார்
ஆடவன் ஆடவனார் ஆடவர் ஆடவன்மார்
திருவாளன் திருவாளர் திருவாளனார் திருவாளர் திருவாளன்மார்
திருவாட்டி திருவாட்டியார் திருவாட்டிமார்
பெண்டு  பெண்டார் பெண்டிர் (உயர்வு) பெண்டுகள்(உயர்வின்மை)
பெருமான் பெருமானார் பெருமானர் பெருமான்மார்
பெருமாட்டி பெருமாட்டியார் பெருமாட்டியர்,பெருமாட்டிமார்
துறவி துறவியார் துறவியர்
அடிகள் அடிகளார் அடிகண்மார்

இளந்தையர் என்பது இருபாற்பொதுப் பன்மைப் பெயர் (Young men or women or both)

{{{1}}}


மகர மெய்யீற்று இயற்பெயரை (Proper name) உயர்வுப் பன்மையிற் குறித்தல் வேண்டின், னகர மெய்யீற்றுப் பெயராக மாற்றிக் கொள்ளலாம்.

33