பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லேயே மூழ்கிப் போன தென்கண்டத்தைக் குமரிக்கண்டம் என்கின்றோம். குமரிமலையிருந்த காலம், ஆரியர் என்ற இனமே தோன்றாத தொன்முது பண்டைக் காலமாகும்.

வடமொழியாளர் தமிழன் தொன்மையை முற்றும் மறைத்துத் தமிழை வடமொழியின் வழியதாகக் காட்டல் வேண்டி, பின் வருமாறு குமரன் குமரி யென்னும் இரு சொற்களின் வடிவையும் பொருளையும் திரித்தும் மிகுத்தும் உள்ளனர்.

குமரன்- குமார - குழந்தை, பையன்,இளைஞன், மகன் (இருக்குவேதம்).

குமரி - குமாரி - சிறுமி, பத்திலிருந்து பன்னீரகவைப்பட்டவள். இளஞை, மகள் (அதர்வவேதம்).

இவ்விரு சொற்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டுமாறு, மூலத்தையும் கீழ் வருமாறு திரித்துள்ளனர்.

கு + மார எளிதாக இறப்பது.

இப்பகுப்பும் சொற்பொருட்கரணியமும் இயற்கைக்கு மாறகவும் உத்திக்குப் பொருந்தாமலும் இருப்பதையும், மகன் மகள் என்னும் பொருள் தமிழிலின்மையையும் நோக்குக. இன்றும், 'இந்தச் சுமையைத் தூக்க முடியாத நீ ஒருகுமரனா?" என்று ஓர் இளைஞனை நோக்கி மக்கள் வினவுவதையும். “கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப் பெண்ணுக்கு ஒரு பிள்ளை" என்னும் பழமொழி வழக்கையும், ஊன்றி நோக்கி உண்மையை அறிக.

குமரன் குமரி என்னும் சொற்களை வடசொல்லென்று நீக்கிவிடின், வடமொழியாளர் கூற்றை ஒத்துக் கொண்ட

35