பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாகவும், குருமரிமலை மூழ்கியது ஆரிய வருகைக்குப் பிற்பட்டதாகவுமே முடிதல் காண்க.

திரு என்னும் சொல்லின் பல பொருள்களுள், தெய்வத் தன்மை என்பதும் ஒன்று.

எ-டு:- திருக்கண்ணப்பர், திருக்குறள், திருவரங்கம், திருவிழா, திருநீறு, திருமணம் முதலிய சொற்களில் திரு என்பது தெய்வத்தன்மைக் கருத்தோடு தூய்மைக் கருத்தையும் உணர்த்தும்.

மதிப்பான மக்கட்டன்மையைக் குறிக்கும் திருவாளன் என்னும் அடைச்சொல், திரு. என்று குறுகிநிற்கும்போது முற்றுப்புள்ளி பெற வேண்டும். அல்லாக்கால், தெய்வத்தன்மையுணர்த்தும் திரு என்னும் சொல்லோடொப்பக் கொண்டு மயங்க நேரும்.

எ-டு :- திருநாவுக்கரசு (இறையடியார் பெயர்) திரு.நாவுக்கரசு (பொதுமகன் பெயர்)

இறையடியார் பெயரே. பொதுமகன் பெயராயின் அப்படியேயிருக்கலாம். புள்ளி வேண்டியதில்லை. துறவியார் பெயருக்கு முன் தவத்திரு என்பதையும், தமிழ்த்தொண்டர் பெயருக்கு முன் தமிழ்த்திரு என்பதையும், மறையொழுக்கத்தினர் பெயருக்கு முன் மறைத்திரு என்பதையும். அடைச் சொல்லாக ஆளலாம்.

எ-டு :-தவத்திருக்குன்றக்குடி யடிகள் தமிழ்த்திரு மறைமலையடிகள்

மறைத்திரு மணியம் அவர்கள்

36