பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீ ல ஸ்ரீ என்னும் சிலமட வழக்கைத் திருத்தவத்திரு அல்லது பெருந்தவத்திரு என்று குறிக்கலாம்.

திருமதி என்னும் அடைச்சொல், திரு என்னும் தென் சொல்லையும் மதி என்னும் வடமொழியீற்றுத் திரிபையுங் கொண்ட இரு பிறப்பி (Hybrid), ஆதலால், அதை அறவே விலக்கல்வேண்டும்.

   திருமகன் - திருமான்-ஸ்ரீமத் (வ) -ஸ்ரீமதி (பெண்பால்)
   திருமதி - ஸ்ரீமதி. திருவாட்டி என்னும் தூய தென்

சொல்லை நீக்கிவிட்டுத் திருமதி என்னும் இரு பிறப்பியை ஆள்வது.

     "பேதைமை யென்ப தியாதெனின் ஏதங்கொண்
      டூதியம் போக விடல்."

என்னும் திருக்குறட்கே எடுத்துக்காட்டாம். ஒருகால், திருமதி என்பதன் ஈற்றை அறிவுப் புலனைக் குறிக்கும் தென் சொல்லாகக் சுருதிக் கொண்டனர் போலும் ! அறிவுத் திறனைக் குறிக்கும் மதி என்னும் தென் சொல் வேறு, பெண்பாலுணர்த்தும் மதீ என்னும் வடமொழியிறு வேறு.

இனி, மதிப்படைச் சொற்கள். (க) முன்னடைச் சொற்கள் (உ) பின்னடைச் சொற்கள் என இரு வகைய.

கண்ணியம் வாய்ந்தவர் பெயருக்குப்பின், 'அவர்கள்' என்று குறிப்பது பின்னடைச் சொல்லாகும். அது உயர்வுப் பன்மை. அதற்கு ஒருமையும் பன்மையும் இல்லை. எ-டு: திரு. மாணிக்கவேல் செட்டியார் அவர்கள்.

                                 37