பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவாணர் வாழ்க்கை

வரலாற்றுச் சுருக்கம்


நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரநயினார் கோவில் என்னும் ஊரில் தி.பி. 1933 சுறவத்திங்கள் 26 (கி.பி. 7-2-1902) ஆம் நாள் கணக்காயர் ஞானமுத்தர் - பரிபூரணம் அம்மையார் ஆகியோரின் இல்லறப் பயனாய்-- கடைசி மகனும் 'தேவநேசன்' தோன்றினார். இவர்தம் தமிழாசிரியர் இவரைக் 'கவிவாணன்" என்று பாராட்டிய மையால் 'தேவநேசக் கவி வாணன்' என்று தம் பெயரைக் குறித்த இவர், தனித்தமிழ் விருப்பினால் தேவநேயப் பாவாணர் ஆனார்.

ஆங்கில இலக்கியம் பயின்று சேக்கசுப்பியர் அதிகாரி (Authority on Shakespear) யாக விரும்பிய தேவநேயர், தமிழ் விருப்பால் தமிழ்க் கல்வியை மேற்கொண்டு ஆங்கிலத்தைப் படிக்காமலும், பேசாமலும் சிலவாண்டுக் காலம் புறக்கணித்த தமிழாசிரியராய் அமர்ந்தார். அக் காலத்தே மதிப்புயர்ந்த மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதப் பட்டத்தை முதலில் பெற்றவர் நாவலர் ந. மு. வேங்கட சாமியார், அடுத்தவர் பாவாணர். 22 ஆண்டுகள் பல்வேறு பள்ளிகளில் தமிழாசிரியராயும், 12 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராயும், 5 ஆண்டுகள் அண்ணமலைப் பல்கலைக்கழகத் திராவிடமொழியாராய்ச்சித் துறையிலும்

2