பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பணியாற்றி. அங்கு இவர் தொகுத்துவந்த சொற்பிறப்பு அகரமுதலிப் பணி முற்றுமுன்னரே தமிழ்ப் பகைவர் சிலரின் அழுக்காற்று முயற்சியால் அப்பல்கலைக் கழகத்தினின்றும் வேலை நீக்கம் செய்யப்பட்டார்!

தாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்படக் கூடும் என்பதையறிந்ததும், 'எனக்கு வறுமையும் உண்டு: மனைவி மக்களும் உண்டு. அதோடு மானமும் உண்டு என்றுரைத்த பாவாணரிடம், பிறரோடு ஒத்துப்போங்கள் என்று நண்பர்கள் சொன்னபோது 'என்ன தீங்கு நேரினும் உண்மையை எடுத்துச் சொல்வது ஆராய்ச்சியாளனின் கடமை. மிகக் கொடுமையாய் வட மொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழை அதனின்று மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள் " என்று கொள்கைப் பிடிப்புடன் கூறியவராய் வருவாய் இழப்புடன் அப் பல்கலைக் கழகத்தைவிட்டுத் தமிழும் தம்மோடு வெளியேற 23-1-1961-இல் வெளியேறினார்.
இருபத்து மூன்று திரவிட மொழிகளிலும் இலக்கணப் புலமையும், இந்தி, சமற்கிருதம், கிரேக்கம், இலத்தீனம், உருது,எபிரேயம், சப்பானியம், ஆங்கிலம் ஆகிய மேலை கீழை மொழிப் புலமையும் கொண்டிருந்த பாவாணர் மொழியாராய்ச்சியில் - சிறப்பாகச் சொல்லாராய்ச்சியில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இலராய் விளங்கினார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்றும் பாவாணர் வெளியேறுவதற்குக் காரணியாயிருந்த வங்கப் பேராசிரியர் சுநீதிகுமார் சட்டர்சியே. "பாவாணரின் மொழியாய்வு உண்மைகள் வெளிப்பட்டிராவிடின் தமிழின்