பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாய்மையும் தொன்மையும் பொய்யாய்ப் பழங்கதை யாய்ப் போயிருக்கும்."
"But for his (Paavaanar's) researches in philology, the purity and antiquity of Tamil might have remained a myth" -Prof. S. K. Chatterjee
in Cultural Heritage of India - Vol. V PP 361
என்று பின்னர்க் கூறியுள்ளாராதலின், மேலும் கூறல் மிகையாகும்.
தனித்தமிழிலேயே எண்ணவும் எழுதவும் பேசவும் வேண்டும் என்று மறைமலையடிகளார் இயக்கமாய் விளங்கிய நிலையைப் பின்பற்றி,அடிகளாரை மூலவராகக் கொண்டு, உலகத் தமிழ்க் கழகம் என்னும் தனித்தமிழ்ப் பேரியக்கத்தை தி.பி. 1999 கன்னி 20 (6-10-1968)-இல் தோற்றுவித்து இவ்வியக்கத்தின் வாணாள் தலைவராய்ப் பாவாணர் விளங்கினார்.
பாவாணரைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளாத தமிழர்,அவர்தம் வாணாளிறுதியில் அவர்தம் மொழியாய்வுத் திறத்தை ஒருவாறு உணர்ந்தனர். பாவாணரின் 73-ஆம் அகவையில் 8-5-1974-இல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் இயக்குனராக அவர் அமர்த்தப் பட்டார். அகரமுதலியின் 13 மடலங்களில் முதன்மடலத்தின் 'அஆ' எழுத்துகட்கு மட்டும் அமைந்த முதற்பகுதி தட்டச்சில் 1500 பக்க அளவில் பாவாணரால் எழுதப் பட்டது. அதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. அகர முதலியின் 13 மடலங்களும் பாவாணரால் எழுதிமுடிக்கப் பெற்றிருப்பின் தமிழின் தனித்தன்மை உலகவரங்கில்

4