பக்கம்:தமிழ் கடன்கொண்டு தழைக்குமா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறுதியாய் நிலைநாட்டப்பட்டிருக்கும். அப்பணி முற்று முன்னரே பாவாணர் மறைந்துவிட்டார்.மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது,தம் முதுமை உடல்நலிவையும் பொருட்படுத்தாது சென்று 5-1-1981-இல் பொதுனிலைக் கருத்தரங்கில் ஒன்றேகால் மணிநேரம் தமிழின் தொன்மையையும் முன்மையையும் தனிச் சிறப்பையும் முழங்கிய பாவாணர் அன்றே மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 15-1-81-ஆம் நாளில் நம்மைவிட்டு மறைந்தார்.

பாவாணரால் எழுதப்பட்ட முப்பதுக்கும் மேலான அரும் பெரும் ஆராய்ச்சி நூல்களும் தமிழருக்கமைந்த கருவூலங்கள். அவற்றை நாட்டுடைமையாக்கிவெளியிடத் தமிழக அரசு உடன் முன்வருதல் வேண்டும். "தமிழே உலக முதன்மொழி, தமிழைத் தனித்தமிழாகவே வழங்க வேண்டும்: தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாய் அமைந்தது முதன் மாந்தன் பிறந்தகம் குமரிக் கண்டம் இவை போன்ற பேருண்மைகளைப் பாவாணர் நூல்களின் வழியறிந்து தமிழர் எழுச்சி பெறுவாராக.