பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


சக மாணவர்கள்

சுவாமிகளைச் சந்தங்கள் பாடச் சொல்லி விட்டுப் பிள்ளையவர்கள் ‘கஞ்சிரா’ வாசித்துத் தானே களிப்படைவாராம். இந்தச் சமயத்திலேதான் தமிழகத்தின் தலை சிறந்த மிருதங்க வித்வான்களான திருவாளர்கள் புதுக்கோட்டை தட்சிணுமூர்த்திப் பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை இருவரும் மகா வித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்களிடம் மாணவர்களாக இருந்து வந்தனர்.

மீண்டும் நாடகாசிரியர்

தமிழ்நாடு செய்த தவத்தின் பயனாக மகாவித்துவான் மான்பூண்டியா பிள்ளை அவர்கள் வேண்டுகோளின்படி சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகள் மீண்டும் நாடக ஆசிரியப் பொறுப்பை மேற் கொண்டார். பிள்ளை அவர்களையும் அடிக்கடி சென்று பார்த்து வருவதுண்டு. வள்ளி வைத்தியநாதய்யர், அல்லி பரமேஸ்வர ஐயர் ஆகியோர் நடத்தி வந்த நாடக சபைகளில் சுவாமிகள் சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். திருவாளர் பி. எஸ். வேலு நாயர் அவர்களின் ஷண்முகானந்த சபையிலும் நெடுங்காலம் சுவாமிகள் பணிபுரிந்தார். திரு. பி. எஸ். வேலு நாயர் அவர்களும், எனது தந்தையார் திரு. டி. எஸ். கண்ணுச்சாமிப் பிள்ளை அவர்களும் ஆசிரியர் சுவாமிகளின் அன்புக்குரிய மாணவர்களாவார்கள். திரு. வேலு நாயர் அவர்களின் குழுவிலிருந்தபோதுதான் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ‘மனோஹரன்’ நாடகத்திற்குச் சுவாமிகள் பாடல்கள் இயற்றினார்.

மாணவ மாணவியர்

தமிழ் நடிகருலகில் திரு. வேலு நாயர் அவர்களின் பேச்சுத் தி ற னை ப் புகழாதாரில்லை. இத்தகயை