பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

நடிக்கவும் பாடவும் கற்றுக் கொடுத்தார்களாம். வட இந்தி யாவிலும் மன்னர்களுடைய ஆதரவில் நாடகக்கலை வளர்க் கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டிலும் நாடகத்திற்குத் தனிப் பெருமை கொடுத்திருக்கிறார்கள். இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற பாகுபாட்டிலிருந்தே தமிழ் மொழியில் மூன்றில் ஒன்றைச் சீதனமாகத் தமிழ் நாடகத் திற்கு நம் முன்னோர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறதல்லவா?

சங்க காலத்தில் பாடினிகளும் பாணர்களும் கூத்தர்களும் நாடகத்தை வளர்த்திருக்கிறார்கள். 8, 9-வது நூற்றாண் டிலே பல்லவ அரசர் ஒருவர் சிறந்த நாடகங்களை இயற்றி இருக்கிறார். நொண்டி நாடகம், லாவணி முதலிய பலவகை நாடகங்கள் தமிழ் நாட்டில் இருந்திருக்கின்றன என்பதையும் இந்த நூல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. எல்லா நாடுகளிலும் எல்லா மக்களும் நாடகத்தைச் சுவைத் திருக்கிறார்கள். அந்தக் கருவி கீழான உணர்ச்சிகளைத் தூண்டும்படி சில சமயங்களில் பயன்பட்டிருக்கிறது. இந்த அற்புதக் கருவியை மனித வாழ்க்கையைப் புனிதப் படுத்தும் கருவியாகப் பயன்படுத்தவேண்டுமென்பதே இந்த நூலாசிரி யரின் ஆசை. அழகாகவும் சுவையாகவும் புலமையோடும் இந்நூலை எழுதியுள்ள அவருடைய ஆசை வெகு விரைவில் நிறைவேறுமாக. தமிழர்கள் இந்நூலை ஆழ்ந்து படித்துப் பயனுறுவார்களாக.

எஸ். மகராஜன்