பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

ஆராய்ச்சி ரீதியில் விமர்சித்து, அந்த இரண்டுக்குமுள்ள இடைவெளியையும் அளந்து காட்டுகிறார்.

தமிழ் மொழியிலே, நாடக இலக்கிய - இலக்கண நூல்கள் முன்னொரு காலத்தில் இருந்தன என்பதனைச் சான்றுகளுடன் விவரித்து, பிற்காலத்தில் அவை அழிந் தொழிந்ததைச் சுட்டிக்காட்டி, ஆயாசப்படுகிறார், தமிழிடத் துக் கரைகாணாத பற்றுடைய ஆசிரியர்.

இந்நூலின் முற்பகுதியானது ஆசிரியரின் ஆராய்ச்சி அறிவைப் புலப்படுத்துகின்றது. பிற்பகுதி முழுவதும் நாடகத் துறையில் அவருக்குள்ள அனுபவத்தைப் புலப் படுத்துகின்றது. நாடகக் கலைவளர்ச்சிக்குத் தொண் டாற்றிய பழைய நாடகாசிரியர்களையும், நடிக-நடிகையரை யும், நாடகக் கம்பெனிகளையும் பட்டியல் தொகுத்துக் காட்டியுள்ளார். யாரையும், எதையும் விட்டுவிடவில்லை. தக்கார் சிலர் பற்றிச் சற்று விரிவாகவே கூறியுள்ளார்.

கடந்தகால நாடகங்கள் சிலவற்றைப்பற்றி சமுதாயத் தில் முரண்பாடுடைய இருவேறு கருத்து நிலவிவருகின்ற தல்லவா! அதை ஆசிரியர் புறக்கணிக்கவில்லை. அதுபற்றித் தம்முடைய ஆராய்ச்சி ரீதியான முடிவுகளையும் இந்நூலில் தந்துள்ளார். குறிப்பாக, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய கோவலன்' நாடகம் பற்றித் தமிழ்ப் புலவருலகில் கூறப்படும் குறைகளுக்கு கு. சா.கி. சமாதானம் சொல்ல முயன்றிருக்கிறார்.

சிலப்பதிகாரப் பாத்திரங்களின் சிறப்பைக் குறைத்திடும் வகையில் தவத்திரு சுவாமிகள் கோவலன் நாடகத்தை அமைத்ததாகச் சொல்லப்படுவதைச் சிறிது சினத்தோடு மறுத்துரைக்கிறார். இளங்கோவடிகளையும் விஞ்சும் வகை யில் சிலப்பதிகாரப் பாத்திரங்களின் தரத்தைத் தவத்திரு சுவாமிகள் உயர்த்தியிருப்பதாகவும் அழுத்திக் கூறுகிறார். ஆனால், சுவாமிகள் எழுதிய நாடகத்தை நடித்த நடிகர்கள் சிலப்பதிகாரப் பாத்திரங்களை இளங்கோ படைத்த தரத்தி