பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 123.

(தொகையறா)

சங்கரர் இராமாநுஜர் புத்தர் முகமது போன்றோர்

இத்தரையில் தோன்றிபொங்கும் மத வெறிபிடித்து அவரவர்கள் போக்கின்

வழிப் பேனாரன்றோ! இங்கதுவும் போதாமல் ஏசுவேனும் ஓர்மதமும்

இடையில் வந்தே. பங்கமுற்று இந்தியரைப் பலவாறாய்ப் பிரித்ததுவும்

பாபம்தானே.

(பாட்டு)

காந்தி மதமே சதம், கதருடையே இதம் காருண்ய பாஸ்கரன் கூறும் மெய்ப் பக்திப் பதம்-(ஜாதி).

இப்பாடலின் இறுதியில் கதர் இயக்கத்தின் முக்கியத் துவம் குறிப்பிட்டிருப்பதைக் காணுகின்றோம்.

தாய் நாட்டின் பெருமை, அன்னிய ஆதிக்கத்தின் சிறுமை, விதேசித்துணியின் மேல் நாட்டு மக்களுக்குள்ள மோகம் ஆகியவை பற்றிய ஒரு பாடல்:

(ராகம்-ஜோன்புரி தாளம்- ஆதி)

சத்யமென்றுமே தளரா நாடு-இந்து தேசம் தனைப் புகழ்ந்து பாடு-நல்ல வித்யானுகூலமுள்ள நாடு-இதில் விளையும் பற்பல சொர்ணமேடு -(சத்ய)

ஆங்கிலேயர் தேடி வந்த தேசம்-நம்மை ஆள நேரிட்ட தவர் பாசம்-இனி ஏங்கி இருப்பதுவும் மோசம்-இன்னும் ஏன் வரவில்லை இந்திய ரோஷம் -(சத்ய).