பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கவிஞர் கு. சா. கி.

கறுப்பர்களை காக்காய்க் கூட்டத்துக்கு உவமைகாட்டிப் பாடுவான்.

பூமி பாலகதாஸ் எழுதிய அந்த அற்புதமான பாடலைப் பாருங்கள்.

சிந்துபைரவி-ஆதி

காக்கா காக்கா கடைகெட்ட காக்கா காக்கரட்டைக் காயைப்போலே மூக்கெடுத்த

- காக்கா (கா)

ஒங்க, வீட்டு மேலே கடனுண்டு காக்கா-அது வெள்ளைக் கொக்கு செய்த மாயம் காக்கா-மேல் நாட்டு மோகங்கொண்ட லையும் காக்கா-சொந்த காட்டுச் சகோதரரைக் காட்டிக் கொடுத்துவரும் (கா)

காத்தாய் பறக்கிறாயே காக்கா-மகாத்மா காந்தி சொன்னபடியேகேளு காக்கா-வந்த மாற்றானுக் கிடங்கொடுத்த காக்காமண்டையிலே மூளையின்றி சண்டையிட்டுக் கெட்டழியும் (கா)

எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்கள் நடிகராக மட்டு மின்றி, மிகச் சிறந்த தேசபக்தராகவும் இருந்தார். அவர் நடித்த நாடகங்களில் எல்லோரையும்போல் வெல்வட் ஜம்கிஉடைகளை அணியாமல்கதர் உடைகளையே தரித்தார். இவர் மேடையில் தோன்றும் போதெல்லாம் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தேசீயப் பாடல்களைப் பாடுமாறு கேட் பார்கள். போலீசார் குறுக்கிட்டுத் தேசீயப் படால்களைப் பாடக்கூடாதென்று தடைவிதிப்பார்கள். தடையை மீறித் தேசீயப் பாடல்களைப் பாடி அடிக்கடி தண்டனைபெற்றுச் சிறைபுகுவதும், விடுதலையானதும் மீண்டும் பாடுவதும் சிறைக்குப் போவதும் வழக்கமாகிவிட்டது. அவர் மேடை யில் பாடியவை தான் அடுத்து வரும் பாடல்கள்.