பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 217

நவீனத்தை எழுதியதையும், அண்ணா தன் திராவிட நாடு ஏட்டிலேயே எழுதியுள்ளார். பின் திராவிட நாடு பத்திரிகை நிதிக்கென்றே டி.கே.எஸ். ஒரு நாடகத்தை நடத்தி, அதில் வசூல் ஆன ஒரு பெருந்தொகையை வழங்கியுள்ளார்கள்.

இத் தொடர்புதான் பிற்காலத்தில் அண்ணா ஒரு நாடகாசிரியராக உருப் பெறுவதற்கு நிலைக்களனாக அமைந்தது என்பதைப் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஒளவை எந்த அளவு தேசிய வாதியாக இருந்தாரோ, அதைவிடவும் அழுத்தமான சமூக சீர்திருத்த வாதியாகவும் இருந்தார். நாடகக் குழுவில் தமிழ், ஆங்கிலம், இசை, நாட்டியப் பயிற்சிக்கென்று தனித்தனியே ஆசிரியர்கள் உண்டு. அறிவு வளர்ச்சி மன்றம் என்ற பெயரால் ஒரு சிறந்த நூலகமும், ஒரு கையெழுத்துப் பத்திரிகையும்கூட உண்டு. இதன்மூலம் சீர்திருத்த இயக்கத்திலும், திராவிட இயக்கத்தி லும் நடிகர்கள் பற்றுக்கொள்ள வழிகாட்டிய சண்முகம் அவர்களே, பிற்காலத்தில் வருந்தும் அளவுக்கு, திருவாளர் கள் என்.எஸ்.கே., என்.எஸ். நாராயண பிள்ளை, நடிகமணி டி. வி. என். , எஸ். எஸ். ஆர். , நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆர்., மற்றும் பல நடிகர்கள் திராவிட இயக்கத்தின ராகவே மாறிவிட்டனர்.

ஒளவை சண்முகம் அவர்கள் தலைசிறந்த நடிகர், தயாரிப்பாளர், நிர்வாகியாக மட்டுமின்றி, தேசிய முற் போக்குச் சிந்தனையாளராகவும், தமிழ்க் கலாச்சாரச் செயல் வீரராகவும் திகழ்ந்து, தமிழரசுக் கழகத் தலைவர்களில் ஒருவராக, அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றி, தமிழக எல்லைகள் மீட்சிக்கும். தமிழ் பயிற்சி மொழிக்கும், மாநில சுயாட்சிக்கும் பாடுபட்டார். மற்றும் , தமிழ் எழுத் தாளர் சங்கப் பொருளாளராகவும், பாரதி சங்கச் செயலாள ாாகவும், நாடகக் கழகத் தலைவராகவும், நடிகர் சங்கத்

த.நா.-14