பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 223

றப் பெற்றது. ஆனால் அது வேடிக்கையான-இல்லைஎன்னைப் பொறுத்தவரை வேதனையான கதை.

வேலைக்காரி நாடகப் பத்திரிகை விளம்பரங்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அனைத்திலும் எமது அடுத்த நாடகம் தூக்குமேடை-ஆசிரியர் கு. சா. கி என்று மாதக் கணக்கில் விளம்பரம் செய்து, பிறகு தேதியும் குறிப் பிட்டு, ஊரெங்கும் சுவரொட்டிகளும் ஒட்டிய பிறகு அடுத்த நாளே. அதே ஊரில் வெறொரு தியேட்டரில், அதேதேதியில் எம். ஆர். ராதா நடிக்கும் தூக்குமேடை By மு. கருணாநிதி என்று ஊரெங்கும் பெரிய அளவில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. எனது அந்தமான் கைதி நாடகம் 1944ல் முதல் பதிப்பு வந்தபோது, அதில் முதல் நாடகமே தூக்கு மேடை (அச்சில்) என்று பதிப்பித்திருந்தேன். பெரியார் முதல் பிரமுகர்கள் பலர் சொல்லியும், எம். ஆர். ஆர், அவர்கள் எந்த நியாயத்தையும் ஏற்றுக் கொள்வதாயில்லை. கடைசியில் அண்ணாவிடம் அடைக்கலம் புகுந்தோம். எதிலும் சமாதானத்தையே விரும்பும் அவர், நாடகம் முழு வதையும் படித்துப் பார்த்துவிட்டு, அதன் உரையாடலில் வரும் ஒருசொல்லையே நாடகத்தின் தலைப்பாக வைக்கும்படி ஆலோசனை கூறினார்.

' என்காணிக்கை' என்பதுதான் அந்தத் தலைப்பு.1947ல் எனது என் காணிக்கை நாடகம் கே. ஆர். ஆர். கம்பெனியில் அரங்கேறியது. நாடகத்திற்குப் பிரமாதமான வரவேற்புக் கிடைத்தது. பொதுவுடைமைத் தத்துவத்தின் புரட்சிக் கனல் சிதறும் உரையாடல்களும் சம்பவங்களும் பாடல்களும் தொழிலாளர் வர்க்கத்தை தட்டி எழுப்புவதாக இருந்தன. அந்த நாடகத்தின் காட்சி அமைப்பு முறைகளிலேயே அற்புத மான உத்திகளைக் கையாண்டிருந்தேன். அதாவது முதல் காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையே விளக்கு அணைந்து, மறுபடியும் எரியுமல்லவா...இந்த இடைவெளிக்கு முன்னும் பின்னும் காட்சிகளின் விளக்கமாக இரண்டு வரிப் பாடல் பின்னணியில் ஒலிக்கும். எடுத்துக் காட்டாக,