பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கவிஞர் கு. சா. கி.

முன் காட்சி, பணக்கார முதலாளியின் ஆடம்பரமான மாளிகைக் காட்சி முடியும்போது,

"வானமளாவிய மாளிகைதனிலே

வாழ்ந்து களிப்பவன் முதலாளி'

இது பாடல். அடுத்த காட்சி கூரைகள் பிய்ந்து தொங்கும குடிசை. விளக்குஅணைந்து ஒளிவந்ததும் குடிசையும் அந்தக் குடிசைக்கு வெளியே ஒரு தொழிலாளி தனது ஓட்டைக் குடிசையையும் எதிரே தெரியும் வானளாவிய மாளிகை யையும் நெஞ்சக் குமுறலோடு பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவான். பின்னணியில் அடுத்த ஒரு வரிப்பாடல் எதிரொ லிக்கும். அடுத்து வரும் காட்சி விளக்கப் பாடல் இதுதான்.

'கானல் மழை பனி ஓட்டைக் குடிசையில் கலங்கியே வாடுகின்றான் தொழிலாளி.'

அடுத்து ஒரு காட்சி. பணக்கார முதலாளிக்கு வேலைக்காரன் பால்கொண்டு வந்து தருகிறான். முதலாளி சிறிது சுவை பார்த்துவிட்டு 'சர்க்கரையில்லையேடா மடையா' என்றுகூறி கொதிக்கும் பாலை வேலையாளின் முகத்தில் கொட்டு கிறான். சூடுதாங்காமல் துடிக்கிறான் வேலையாள். ஒரு வரிப்பாடல் தொடங்குகிறது. விளக்கு அணைகிறது.

"பாலுக்குச் சர்க்கரைஇல்லை யென்று ஏழைமேல்

பாம்பெனச் சீறுகின்றான் முதலாளி'

அடுத்தது விளக்கு எரிகிறது. ஒரு தொழிலாளி கலயத்தில் கூழைச் சுவைத்து உதட்டைப் பிதுக்கி உப்பில்லையேயென்று சைகை காட்ட, அவன்மனைவி துட்டு இல்லையென்று சைகை யிலேயே கூற, அடுத்த ஒரு வரிப்பாடல் எதிரொலிக்கிறது.

கூழுக்கு உப்பில்லையென்று குமைகின்றான் இங்கே

கூலிக்குழைக்கும் ஏழைத் தொழிலாளி'

எடுத்துக்காட்டுக்கு இன்னும் ஒரு காட்சி: ஒரு இளம் தொழிலாளிப் பெண்ணின் தாய் சாகக் கிடக்கின்றான்.