பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 225

"ருத்துவரை அழைக்கப் பணமின்றித் தவிக்கின்றாள் அந்தப் பெண். அப்போது அங்கே வந்த கருங்காலி வீரையன், மேனேஜரிடம் பணம் வாங்கித் தருவதாக அழைத்துப் போகிறான். மானேஜரும் பணம் கொடுத்து, டாக்டரை அழைத்துவருமாறு அனுப்பிவிடுகிறான். தொழிலாளிப்பெண் புலிக்குகையில் சிக்கிக் கொண்ட மான்குட்டிபோல் நடுங்கு கின்றாள். காமவெறி கொண்ட மானேஜர் அவளை நெருங்கு கிறான். விளக்கு அணைகிறது. இருட்டில் அம்மா அம்மா... என்று அந்தப் பேதைப் பெண்ணின் அலறல் கேட்கிறது. அதைத் தொடர்ந்து காட்சி விளக்கப் பாடல் எதிரொலிக் கிறது.

பாடல்

அம்மா...அம்மா... அம்மா! அம்மா அம்மாவென்று அலறினாலும்

பணக் காரன் உன்னை சும்மா விடுவானோ கற்பைச் சூறையாடாமல்

அகம்பாவக்காரன் புற்றரவின் வாய்ப்பட்டதோர் தேரையும்

புலிவாய்ச் சிக்கிய தோர் மானும் உற்றிடுங் கெதியே உற்றனை மீள

உனக்கினி வகையேது'

இப்போது இருள் நீங்கி விளக்கு எரிகிறது. பெண் அலங் கோலமான நிலையில், ஒரு ஓரத்தில் விம்மி விம்மி அழுது கொண்டு நிற்கிறாள். மானேஜர் சிகரெட்டைப் புகைத்தபடி அலட்சியமாகச் சிரித்துக்கொண்டு நிற்கிறான். பாடல் ஒலிக்கிறது.

அற்றது மானம் அழிந்தது கற்பு

ஆணவம் கொண்ட பணம் பெற்றவன் ஒருவன் பேசினும் கொடியன் -

பெரும்பலி கொண்டான்