பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கவிஞர் கு. சா. கி.

இந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் பல அருமையான நாடகங்களை அரங்கேற்றி வெற்றிகண்டுள்ளார். துறையூர் மூர்த்தியின் இன்பநாள், உலகில் சிரிக்கிறது. இலங்கேஸ் வரன்; பி. பாலசுப்ரமணியத்தின் உபகுப்தன், திருமாறனின் சாணக்ய சபதம், காடகமுத்தரையன், வேங்கைமார்பன், மாலிக்கபூர், துரோணர், அறிவானந்தத்தின் இந்திரஜித், பிரகாசத்தின் விஸ்வாமித்திரர்; இரா. பழனிச்சாமியின் சூரபத்மன், சிசுபாலன், சுக்ராச்சாரியார்-இரண்டு பாகம் போன்ற அருமையான நாடகங்களை மேடையேற்றி வெற்றி கண்டார்.

இந்த வெற்றி அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு. காட்சி அமைப்பிலும் கதை அம்சத்திலும் சிறந்து விளங்கும் அவரது நாடகங்களில் ஏதோ ஒரு இனம் தெரியாத குறை இருப்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அது தொழில்முறைக் குழுவாகவும் இல்லை; பயில்முறைக் குழுவாகவும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறது. தேர்ந்த அனுபவமுள்ள பயிற்சி தரும் ஆசிரியப் பயிற்சியில்லாத குறை பளிச்சிடுகிறது. இதை அவரிடம் உள்ள நல்லெண்ணத்தால்தான் கூறுகின்றேன். நடிப்பில் அனுபவ மெருகும் இயற்கைத் தன்மையும் வளர்ந் தால், இன்றுள்ள ஒரே நாடக அமைப்பாகத்திகழும் இக்குழு. சிறப்புக்குரியதாகத் திகழும். தமிழகத்தின் எதிர்கால நாடக வளர்ச்சிக்கும் துணைபுரிவதாக அமையும் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஸ்பெஷல் நாடக முறை

தமிழகத்தில் ஸ்பெஷல் நாடகம் என்பது, சென்ற ஒரு நூற்றாண்டுக்கு அதிகமாகவே நடந்துவருகின்றது. எனக்குத் தெரிந்தவரை, சென்ற அரை நூற்றாண்டுக்கு மேலாக இத். துறையில் புகழ்பெற்ற சிலரைப்பற்றிக் குறிப்பிடலாமென. எண்ணுகின்றேன்.