பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 கவிஞர் கு. சா. கி.

தற்போது மதுரை, புதுக்கோட்டை, சேலம், திண்டுக்கல் கோவை போன்ற ஊர்களிலுள்ள நடிகர்கள், சுற்று வட்டாரங் களில் உள்ள சிற்றுார்களில், திறந்தவெளி அரங்கங்களில், தெருக்கூத்து முறையில் வயிற்றுப் பிழைப்புக்காக நாடகங் களை நடத்துகின்றனர்.

சென்ற சில ஆண்டுகளில், மதுரை உடையப்பா அவர்கள், சென்னையில் சில இடங்களில் மேல்கண்ட ஸ்பெஷல் நாடகங்கள் நடத்தியதை, உங்களில் சிலர் பார்த் திருப்பீர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் இயலிசை நாடக மன்றத்தின ரின் ஆதரவில் டி.ஆர். மகாலிங்கம், எம். எம் மாரியப்பா, கொத்த மங்கலம் சீனு ஆகியோரின் வள்ளிதிருமணம், நந்தனார் ஆகிய நாடகங்கள் நடந்ததையும் அறிவீர்கள்.

இதைத் தவிர முறையான அமைப்போடு நாடகம் நடத்தும் நிரந்தரக் குழுவினர்களே பூண்டற்றுப் போய் விட்டதை நினைத்தால், வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை.

நாடகத்தின் பயன்

இயல், இசை, நாடகம் என முக்கூறுகளாக வகுக்கப் பெற்ற தமிழின் சிறப்பைக் குறித்து முன்னே விளக்கிச் சொன்னேன். இவற்றுள் இயற்றமிழ் மதியைத் தொடுவ தாகவும், இசைத்தமிழ், மனத்தை ஈர்ப்பதாகவும், இயலும் இசையும் கலந்த நாடகத்தமிழ், உணர்ச்சியைத் தூண்டிக் காண்போரின் உள்ளத்தில் கிளர்ச்சி யுண்டாக்கி உடனடி யாகச் செயலில் ஈடுபடுத்தும் அற்புதச் சக்தியைப் பெற்றிருப்பதையும் காணுகின்றோம்.

நாடகக்கலைக்கு மக்களின் எழுச்சியைத் தூண்டும் சக்தி இருப்பதை உணர்ந்துதான், மேலை நாடுகள் பலவற்றில் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னதாகவே ஆட்சியாளர்களும் மதவாதிகளும், எதிர்ப்பும் வெறுப்பும் காட்டியும், தடைகள்