பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடக வரலாறு 249

மகாபாரதத்தைப் போன்ற அரசியல் விளக்கங்கள்நுணுக்கங்கள், அறிவியல் தெளிவு நிறைந்த காவியத்தை, இன்னும் உலகமொழிகள் எவற்றிலும் காணமுடியவில்லை.

தமிழினத்திற்கே உரிய அரசியல் வரலாற்றுக் காவிய மான சிலப்பதிகாரம் காட்டும் செந்நெறிகள் நமது பாரம் பரியப் பண்பாட்டு மரபுகளைப் பிரதிபலித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகக் காட்சியளிக்கின்றன.

இக்காவியங்களில் சில அமானுஷ்யக் கற்பனைகள் இருக்கலாம் அவைகளைப் பற்றி நம்மில் சிலர் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் குறைகாணவும் விமர்சிக்கவும் கூடும். ஆயினும், அவைகளிலுள்ள ஆழமான அழுத்தமான நிதர்சன மான நீதிநெறிகள் நிரம்பிய வலுவான கதையம்சங்கள் நாம் படைக்கும் நவீனங்கள், நாடகங்கள் ஆகியவற்றில், பழமை யின் படிவங்கள் நம்மையறியாமலே பிரதிபலிப்பதைக் காணுகின்றோம். சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போம். .

கோவலன், மாதவி யென்னும் கணிகையின்பால் காமுற்றுக் கைப்பொருளெல்லாம் இழந்து, கடைசியில் கண்ணகியுடன் மதுரை சென்று, அங்கே கள்வனென்று குற்றம் சாற்றப் பெற்று மரணதண்டனை யடைகிறான்.

இந்தச் சிலப்பதிகாரக் கதையின் கருப்பொருள் எதுவோ அதையே அஸ்திவாரமாக்கி, எத்தனையோ நவீன, கோவலன் கண்ணகி, மாதவி பாத்திரங்களை மையமாக வைத்து, புதுப் புது நாடகங்கள் புனையப் பெற்றுள்ளது. என்பதைக் கூர்ந்து நோக்கினால் நன்கு விளங்கும்.

பதிபக்தி, சதிலீலாவதி, ரத்தக்கண்ணிர் போன்ற எத்தனையோ கதைகள் அணுகுமுறை-அமைப்புமுறை நடை உடை வேறுபாடுகள் இவைதவிர, அடிப்படைக்கதை அம்சம் ஒன்றே ஆகும்.

நல்லதங்காள் என்னும் நாடகம் و بادق نان ITلاق لازg (داری அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதே அச்சில் எத்தனை நவீனங்கள்!

த. நா-16